Itel இறக்கிய அசுரன்.. ரூ.10,700-க்கு 120Hz டிஸ்பிளே, 50MP கேம், 16GB ரேம், 5000mAh பேட்டரி, டைனமிக் ஐலேண்ட்!
ப்பா.. ரூ.10,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன்-ஆ என்று வாய்பிளக்க வைக்கும்படியான.. சில தரமான அம்சங்களுடன் ஐடெல் நிறுவனம் ஒரு புதிய பீஸ்ட்டை (புதிய ஸ்மார்ட்போனை) களம் இறக்க உள்ளது. அது ஐடெல் எஸ்25 அல்ட்ரா (Itel S25 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும்.
ஐடெல் எஸ்25 அல்ட்ரா மாடல் ஆனது - கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐடெல் எஸ்25 சீரிஸின் (Itel S25 Series) ஹை-எண்ட் வேரியண்ட் (High-end Variant) ஆக இருக்கும். இந்த சீரீஸின் கீழ் பேஸிக் ஐடெல் எஸ்25 (Itel S25) மற்றும் ஐடெல் எஸ்25 அல்ட்ரா (Itel S25 Ultra) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஷநேட்கீக்ஸ் (Passionategeekz) வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் அறிக்கையின்படி, ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate) உடனான 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை (3D Curved AMOLED Display) கொண்டிருக்கும். டிஸ்பிளே சைஸ் ஆனது 6.78-இன்ச் இருக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஆனது இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை (50MP Primary Camera) உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை (Triple rear camera unit) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் (32MP Selfie Camera) இடம்பெறலாம்.
ரியர் டிசைனை (Rear Design) பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப் ஆனது மேல் இடது மூலையில், சிறிய வட்ட வடிவிலான ஸ்லாட்டுகளில் செங்குத்தாக (vertically in the top left corner in smaller circular slots) பொருத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் (LED Flash unit) உள்ளது. அதாவது இதன் பார்ப்பதற்க்கு சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போனை போலவே உள்ளது. (மேலே உள்ள புகைப்படம் ஆனது இதற்கு முன் அறிமுகமான ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் ஆகும்; எஸ்24 அல்ட்ரா உடன் இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்)
மேலும் ஐடெல் ஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோன்களில் (Apple iPhone) காணப்படும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) போன்ற அம்சமும் இடம்பெறும். அளவீட்டை பொறுத்தவரை, இது இன்பினிக்ஸ் ஹாட் 50 சீரீஸ் (Infinix Hot 50 Series) ஸ்மார்ட்போன்களின் அளவை போலவே, 6.9 மிமீ தடிமன் (6.9mm in thickness) கொண்டதாக இருக்கும்.
ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 8ஜிபி பிஸிக்கல் ரேம் (8GB Physical RAM) மற்றும் கூடுதலாக 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) என மொத்தம் 16ஜிபி ரேம் அணுக கிடைக்கும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான யுஐ ஸ்கின் அவுட்-ஆஃப்-பாக்ஸ் ( UI skin out-of-the-box) கொண்டு இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் ஐடெல் எஸ்245 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 18வாட் வயர்டு சார்ஜிங் ஆதரவு (18W Wired Charging Support) உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை (5000mAh battery) கொண்டிருக்கலாம் இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் (Chipset) குறித்து எந்த விவரங்களும் இல்லை.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஐடெல் எஸ்25 அல்ட்ரா (Itel S25 Ultra Price) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ. 10,700 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆன புகைப்படங்களின் படி, ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் க்ரே (Blue and Grey) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








