Home
Mobile

மிரட்டலான Itel போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் அடுத்து ஐடெல் எஸ்25 அல்ட்ரா (Itel S25 Ultra) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் நாட்களில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐடெல் எஸ்25 அல்ட்ரா போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே உடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக சாம்சங் போனின் வடிவமைப்புடன் இந்த ஐடெல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மிரட்டலான Itel போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஐடெல் எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Itel S25 Ultra Specifications): 6.78-இன்ச் 3டி கர்வுடு அமோலெட் டிஸ்பிளே (3D curved AMOLED display) உடன் இந்த ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் யுனிசாக் டி620 சிப்செட் (Unisoc T620 chipset) சிப்செட் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டைட்டானியம், பிளாக், ப்ளூ நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஐடெல் எஸ்25 அல்ட்ரா போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் இந்த ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W சார்ஜி வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐடெல் எஸ்25 அல்ட்ரா போன் வெளிவரும். பின்பு 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பலவேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.13,500 விலையில் இந்த ஐடெல் எஸ்25 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Photo Credit: X/ @passionategeekz

Best Mobiles in India

English summary
Itel S25 Ultra Price, Design, Specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X