Home
Mobile

Itel-ன் ருத்ர தாண்டவம்.. வெறும் ரூ.8,400-க்கு 120Hz டிஸ்பிளே, 8GB ரேம், 50MP ரியர், 32MP செல்பீ, 5000mAh!

நம்ப முடியாத அம்சங்களுடன், ஆனால் சூப்பர் பட்ஜெட் விலையில் ஐடெல் எஸ்25 சீரீஸ் (Itel S25 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனத்தி எஸ்25 சீரிஸ் மாடல்களை வெறுப்பேற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் கீழ் மட்டுமே ஐடெல் நிறுவனம் அதன் எஸ்25 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது என்று நினைத்தால், அது தவறு.

ஏனென்றால் ஐடெல் எஸ்25 (Itel S25), ஐடெல் எஸ்25 அல்ட்ரா (Itel S25 Ultra) ஆகிய 2 மாடல்களுமே வெறுமனே பெயரை வைத்து வியாபாரம் செய்துவிடலாம் என்கிற குருட்டு நம்பிக்கையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது போல் தெரியாவில்லை. இவ்விரு மாடல்களுமே இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டிற்கான வாக்குறுதி என.. ஆர்வமூட்டும் அம்சங்களை கொண்டுள்ளன!

Itel-ன் ருத்ர தாண்டவம்.. வெறும் ரூ.8,400-க்கு 120Hz டிஸ்பிளே, 5000mAh!

விரிவான அம்சங்களை பொறுத்தவரை ஐடெல் எஸ்25 மற்றும் ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஆகிய டூயல் சிம் ஆதரவுடன் வருகின்றன. மேலும் இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. முக்கிய வேறுபாடாக எஸ்25 அல்ட்ரா மாடலானது கர்வ்டு அமோஎல்இடி ஸ்க்ரீன் உடன் வருகிறது. மேலும் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஐடெல் எஸ்25 மாடலில் உள்ள சிப்செட் பற்றிய விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் எஸ்25 அல்ட்ரா மாடலானது யுனிசாக் டி620 சிப்செட் (Unisoc T620 Chipset) மூலம் இயக்கப்படுகிறது, இதனுடன் 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன, அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன, ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களின் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் குறித்து எந்த விவரங்களும் பகிரப்படவில்லை.

இவ்விரு மாடல்களுக்குமான இன்னொரு முக்கியமான வேறுபாட்டை பொறுத்தவரை ஐடெல் எஸ்25 ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐடெல் எஸ்25 அல்ட்ரா சற்றே பெட்டர் ஆன ஐபி64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் முன்னரே குறிப்பிட்டபடி 2 மாடல்களிலும், பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐடெல் எஸ்25 மற்றும் ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஆகிய இரண்டுமே 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. அல்ட்ரா மாடலில் பல்வேறு உபகரணங்களைக் கட்டுப்படுத்த உதவும் இன்ப்ராரெட் டிரான்ஸ்மிட்டர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐடெல் எஸ்25 மற்றும் ஐடெல் எஸ்25 அல்ட்ரா விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடெல் எஸ்25 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.8,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.15,900 முதல் தொடங்குகிறது.

ஐடெல் எஸ்25 ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோமோ பிளாக் (Bromo Black), மாம்போ மின்ட் (Mambo Mint) மற்றும் சஹாரா க்ளீம் (Sahara Gleam) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் ஐடெல் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோமோ பிளாக், கொமோடோ க்ரீன் (Komodo Ocean) மற்றும் மீட்டியர் டைட்டானியம் (Meteor Titanium) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் நிச்சயமாக கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Itel S25 Itel S25 Ultra with 120Hz Display 50MP rear 32MP selfie 5000mah battery Launched See Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X