Home
Mobile

ஈயடிச்சான் காப்பி மாதிரி இருக்கு.. ஆனா விலை ரொம்ப ரொம்ப கம்மி.. Samsung லுக்கில் ரிலீஸான itel S25 Ultra..

சாம்சங் (Samsung) நிறுவனத்திற்கு போட்டியாக, ஐடெல் (itel) நிறுவனம் விரைவில் ஐடெல் S25 (itel S25) மற்றும் ஐடெல் S25 அல்ட்ரா (itel S25 Ultra) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை மிகமிக மலிவான விலையிலும், மற்றொரு மாடலை பட்ஜெட் செக்மென்ட்டிலும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன்கள் தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் பாக்கிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்து விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய itel S25 மற்றும் itel S25 Ultra போன்களின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இதோ.

இந்த புதிய ஐடெல் S25 (itel S25) மற்றும் ஐடெல் S25 அல்ட்ரா (itel S25 Ultra) ஸ்மார்ட்போன்கள் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐடெல் S25 போனின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் இந்திய மதிப்பில் ரூ. 8,371 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஐடெல் S25 அல்ட்ராவின் 8GB ரேம் + 256GB மாடல் இந்திய மதிப்பில் ரூ.15,877 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஈயடிச்சான் காப்பி மாதிரி இருக்கு.. ஆனா விலை ரொம்ப ரொம்ப கம்மி..

ஐடெல் S25 (itel S25) மற்றும் ஐடெல் S25 அல்ட்ரா (itel S25 Ultra):

ஐடெல் S25 (itel S25) சாதனம் ப்ரோமோ பிளாக் (Bromo Black), மாம்போ மின்ட் (Mambo Mint), மற்றும் சஹாரா கலீம் (Sahara Gleam) கலரில் வெளிவந்துள்ளது. ஐடெல் S25 அல்ட்ரா (itel S25 Ultra) சாதனம் மிட்டியோர் டைட்டானியம் (Meteor Titanium), ப்ரோமோ பிளாக் (Bromo Black), மற்றும் கொமோடோ ஓஸன் (Komodo Ocean) நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐடெல் S25 மற்றும் ஐடெல் S25 அல்ட்ரா சிறப்பம்சம் (itel S25 and itel S25 Ultra Specifications):
ஐடெல் S25 ஆனது ஒரு பிளாட் AMOLED டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. ஐடெல் S25 அல்ட்ரா வளைந்த AMOLED உடன் ஸ்டைலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மென்மையான 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) கொண்ட டிஸ்பிளேவாக வருகிறது. இது 6.78" இன்ச் அளவு கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

சரியான சிப்செட் இன்னும் மறைப்பில் உள்ளது என்றாலும், ஐடெல் S25 சாதனம் Unisoc T612 மூலம் இயக்கப்படும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. ஐடெல் S25 கேமரா அம்சங்களை பொறுத்தவரை, 50MP மெயின் கேமராவை (camera) கொண்ட சாதனமாக இது வருகிறது. இதுவொரு டூயல் ரியர் கேமரா (dual rear camera) அம்சத்தை கொண்டுள்ளது. இது 32MP செல்ஃபி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது.

ஆடியோவைப் பொறுத்தவரை, இது DTS ஆடியோவை வழங்குகிறது. இது டீப் பாஸ் (deep bass) அனுபவத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் 5000mAh பேட்டரி (battery) அம்சத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த மாடலில் வேகமான சார்ஜிங் இல்லாதது ஒரு குறைபாடாக பார்க்கப்படுகிறது. இது IP54 ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது.

ஐடெல் S25 அல்ட்ரா சிறப்பம்சம் (itel S25 Ultra Specifications):

ஐடெல் S25 அல்ட்ரா சற்று மேம்படுத்தப்பட்ட ஸ்பெக் ஷீட்டை வழங்குகிறது. ஐடெல் S25 அல்ட்ரா (itel S25 Ultra) அதே டிஸ்பிளே அளவுடன் அதே அம்சங்களை வழங்குகிறது. ஆனால் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (corning gorilla glass 71 protection) மூலம் பாதுகாக்கப்பட்ட வளைந்த AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இது விக்டஸ் கிளாஸின் மிகவும் மென்மையான பதிப்பாகும்.

itel S25 Ultra ஹூட்டின் கீழ், யூனிசாக் T620 சிப்செட்டைக் (Unisoc T620 chipset) கொண்டிருக்கலாம். இது 50MP மெயின் கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ட்ரிபிள் ரியர் கேமராவை (triple rear camera) பெறுகிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அம்சத்தை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு அப்படியே சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா போன்ற டிசைனை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel S25 and itel S25 Ultra launching soon in India check price and complete specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X