Home
Mobile

தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஐடெல் பிரியர்களும், இந்த போன் வரட்டும், அப்புறம் வேற போன் பத்தி யோசிக்கலாம் என்று காத்திருக்கும்படி கிடைக்காத பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 18W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் ஐடெல் எஸ்24 (itel S24) போன் வெளியாகி இருக்கிறது.

ஐடெல் எஸ்24 அம்சங்கள் (itel S24 Specifications): இந்த ஐடெல்லில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங் மாடல்!

இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஐடெல் ஓஸ் 13 (itel OS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 12என்எம் (Octa Core MediaTek Helio G91 12nm) சிப்செட் கொண்டிருக்கிறது. மாலி ஜி52 எம்சி 2 ஜிபுயு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

கேமிங் பிரியர்களுக்காக ஹைபர் என்ஜின் (HyperEngine) டெக்னாலஜி வருகிறது. இந்த ஐடெல் எஸ்24 போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் இருக்கிறது.

அதோடு 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கம்மி பட்ஜெட்டிலும் சிப்செட் மற்றும் ரேம் சிஸ்டம் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதேபோல கேமரா சிஸ்டமும் பக்கா சென்சாருடன் வருகிறது.

ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங் மாடல்!

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 ஐசோசெல் (Samsung ISOCELL HM6) சென்சார் மற்றும் நானோபிக்சஸ் பிளஸ் டெக்னாலஜி (Nanopixel Plus Technolgy) வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் (3X In-sensor Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது. நைட் போட்டோகிராபிக்காக சூப்பர் நைட் மோட் (Super Night Mode) பீச்சர்கள் வருகிறது. அதேபோல ரியல்மி போன்களை போலவே ஸ்ட்ரீட் போட்டோகிராபி பில்டர்கள் (Street Photography Fliters) வருகின்றன.

போர்ட்ராய்டு மாஸ்டர் (Portrait Master) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மேலும், மூவி மாஸ்டர் (Movie Master), டூயல் வீயூ வீடியோ (Dual-view Video), வீடியோ பொக்கெ (Video Bokeh), சூப்பர் ஸ்டெடி வீடியோ ஸ்டெபிளைசேஷன் (Super Steady Video Stabilization) போன்ற பீச்சர்கள் கொண்டிருக்கிறது.

ஆகவே, ரியல்மி போன்களை போல பக்கா கேமரா மாடலாக இந்த ஐடெல் எஸ்24 இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி சி போர்ட் (USB-C port) உள்ளது. டூயல் ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது.

8.3 மிமீ தடிமன் மற்றும் 192 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஸ்டார்ரி பிளாக் (Starry Black), டான் ஒயிட் (Dawn White) மற்றும் கோஸ்ட்லைன் ப்ளூ (Coastline Blue) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது. பிங்க் வேரியண்ட்டும் வருகிறது. மேற்கூறிய விவரங்கள் ஐடெல் வெப்சைட்டில் வெளியாகி இருக்கிறது.

ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.12,502 பட்ஜெட்டில் இந்த ஐடெல் போன் விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல வாரங்களில் இந்த போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel S24 With 108MP Camera, 16GB RAM, Helio G91 Chip Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X