Home
Mobile

இந்தியாவே திரும்பும் விலை! ரூ.8,799 விலையில் 16GB ரேம், 50MP AI கேமரா, 5000mAh பேட்டரி! எந்த போன்?

இந்தியாவில் முதல் முறையாக மலிவான பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் என்று கேம் பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் ஐடெல் எஸ் 23 (itel S23) போன் இன்று விற்பனையாகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதைய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில், கேமிங் போன்கள் வாங்கவேண்டும் என்றால், மிட்-ரேன்ஞ் விலைக்கான பணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். குறைந்தது, 12 ஜிபி ரேம் கொண்ட போன்கள் மட்டுமே, கேம் விளையாடும்போது, எந்தவித ஹேங்கிங் பிரச்சனை இல்லாமல் இருக்கும். இவ்வளவு ரேம் கொண்ட போன்களை வாங்க குறைந்தது ரூ.30 ஆயிரமாவது தேவைப்படும்.

ஃபர்ஸ்ட் டைம்.. ரூ.8,799 விலையில் 16GB ரேம், 50MP AI கேமரா போன்!

ஆனால், இன்று (ஜூன் 14) அமேசானில் (Amazon) வெளியாக உள்ள ஐடெல் எஸ் 23 போன் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில், 16 ஜிபி ரேம் உடன் விற்பனைக்கு வருகிறது. இதுமட்டுமல்லாமல், ஏஐ (AI) கேமரா, 5000mAh பேட்டரி என்று மற்ற அம்சங்களிலும் வியப்பை கொடுக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள் விலை குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ஐடெல் எஸ் 23 போனில் என்ன எதிர்பார்க்கலாம்: இந்த ஐடெல் எஸ் 23 போன் 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 130Hz டச் சாம்ப்ளிங் ரேட் வருகிறது. கேம் பிரியர்களுக்காக 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் உடன் வெளியாக உள்ளது. அதன்படி, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வருகிறது.

அதேபோல, 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் என்று 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் இருக்கிறது. இந்த போனில் 256 ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (External Storage) பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த போன் டூயல் கேமரா (Dual Camera) செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி பிரைமரி கேமரா 10X ஜூமிங் வசதி உடன் வருகிறது. 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் இருக்க வாய்ப்புள்ளது.

8 எம்பி ஏஐ செல்பீ கேமரா இருக்கிறது. மெயின் கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) சப்போர்ட் உள்ளது. 10W சார்ஜிங் வசதி உடன் 5000mAh பேட்டரி வருகிறது. இதற்காக டைப் - சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடெல் போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஓஎஸ் 8.6 (itel OS 8.6) உடன் வருகிறது. யுனிசோக் டி606 (UNISOC T606) கொடுக்கப்பட்டுள்ளது.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் ஜி சென்சார் (G Senson) வருகிறது. வைட் (White), பிங்க் (Pink), பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 3டி பேக் பேனல், மல்டிபிள் ரேடியேஷன் கலர்களில் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. அமேசானில் ரூ.8,799 விலையில் இன்று முதல் (ஜூன் 14) விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு மலிவான விலையில், இவ்வளவு அம்சங்களுடன் ஒரு போன் விற்பனையாவது, இதுவே முதல்முறையாகும். இந்த போனை ஆர்டர் செய்தால், 10W சார்ஜர், யுஎஸ்பி கேபிள், புரொடெக்டின் கவர் வரும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Itel S23 With 16GB RAM, 50MP AI Camera To Launch Today In India On Amazon, Here is Specification, Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X