Home
Mobile

யாரு சாமி அவன்! ரூ.10,000 விலையில் 16GB ரேம் + 10X ஜூமிங் கேமரா! எந்த மாடல்?

இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 16GB ரேம் மற்றும் 10X ஜூமிங் கொண்ட சூப்பர் நைட் மோட் கேமரா உடன் ஐடெல் எஸ் 23 (itel S23) போன் அறிமுகமாகயிருக்கிறது. இந்த போனின் டிஸ்பிளே, டிசைன், பேட்டரி என அனைத்தும் அட்டகாசமாக இருக்கிறது.

இந்த போன் எப்போது வெளியாகும், மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு. என்னதான் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அதிகப்படியான மக்கள் பட்ஜெட் போன்களையே விரும்பி வாங்குகின்றனர். இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பட்ஜெட் விலை போன்களில் அதிக கவனம் செலுத்தி, அதிரடியான அம்சங்களுடன் பட்ஜெட் போன்களை கொடுத்து வருகிறது.

ரூ.10,000 விலையில் 16GB ரேம் + 10X ஜூமிங் கேமரா! எந்த மாடல்?

இந்த வரிசையில் ஐடெல் (itel) என்னும் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் இடம் பிடித்திருக்கிறது. வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் பக்காவான அம்சங்களுடன் ஐடெல் எஸ் 23 போனை உருவாக்கியிருக்கிறது. இந்த போன் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வேளையில் அந்த போனின் அம்சங்கள் கசிந்துள்ளன.

ஐடெல் எஸ் 23 (itel S23) அம்சங்கள்: இந்த போன் 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி பிரைமரி கேமரா 10x ஜூமிங் அம்சத்துடன் வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) சப்போர்ட் உள்ளது. செல்பீ கேமரா குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால் 16 எம்பியாக இருக்க வாய்ப்புள்ளது. டைப் - சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் வசதி உடன் வருகிறது. இந்த போன் ஐடெல் ஓஎஸ் 8.6 (itel OS 8.6) கொண்டுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் சிப்செட் தகவல்கள் வெளியாகவில்லை.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்கும். வைட் (White), பிங்க் (Pink), பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. இந்த போனின் 3டி பேனல் டிசைன், மல்டிபிள் ரேடியேஷன் கலர்களில் அட்டகாசமாக இருக்கிறது.

ரூ.8,000 அல்லது ரூ.9,000 விலையில் விற்பனையாக அதிக வாய்ப்புள்ளது. இந்த போன் அமேசானில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel S23 Specifications, Price And Launch Date in India, Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X