Home
Mobile

மாட்டிகிட்ட பங்கு.. 32எம்பி செல்பி கேமரா.. அச்சு அசலா ஐபோன் 14 உருவம் கொண்ட புது மாடல்.. எந்த போன்?

இந்தியா மற்றும் உலக நாடுகளில் கம்மி விலையில் அசத்தலான போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஐடெல் நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ஐடெல் நிறுவனம் போன்களை விற்பனை செய்வதால் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஐடெல்.

அதாவது ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் எஸ்23 பிளஸ் (itel S23 Plus) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த புதிய போன் எத்தியோப்பியாவில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ஐபோன் 14 போன்றே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்23 பிளஸ். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அச்சு அசலா ஐபோன் 14 உருவம் கொண்ட புது மாடல்.. எந்த போன்?

ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (FHD+ AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

நோக்கியா போன்களில் அதிகம் இடம்பெறும் பிராசஸர் தான் இந்த ஐடெல் போனிலும் உள்ளது. அதாவது ஐடெல் எஸ்23 பிளஸ் போனில் யுனிசாக் டி616 (12என்எம்) பிராசஸர் (Unisoc T616 (12nm) processor) வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

ஆனால் இந்த ஐடெல் போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

அச்சு அசலா ஐபோன் 14 உருவம் கொண்ட புது மாடல்.. எந்த போன்?

குறிப்பாக புளூடூத் 5.0, 4ஜி எல்இடி, என்எப்சி, வைஃபை 5 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனின் விலை மற்றும் விற்பனை தகவலை வெளியிடவில்லை ஐடெல் நிறுவனம்.

ஆனாலும் விரைவில் ஐடெல் எஸ்23 பிளஸ் விலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel S23 Plus with AMOLED display, 32MP selfie camera launched: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X