Home
Mobile

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. கம்மி விலை.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐடெல் எஸ்23 பிளஸ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு எலிமெண்டல் ப்ளூ (Elemental Blue) மற்றும் லேக் சியான் (Lake Cyan) நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 5ஜி போன்..

அதேபோல் அமேசான் தளத்தில் வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (Itel S23+ specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (FHD+ 3D curved AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் 2400 x 1080பிக்சல்ஸ், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

2ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் ஆக்டோ-கோர் 12என்எம் பிராசஸர் (2GHz UNISOC T616 Octa-Core 12nm processor) கொண்டுள்ளது இந்த போன். இதனுடன் மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஐடெல் எஸ்23 பிளஸ் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 5ஜி போன்..

8ஜிபி ரேம் + 128ஜிபி மெரியுடன் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இந்த போனின் எடை 179 கிராம் ஆகும்.

சியோமி, விவோ, மோட்டோ நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel S23 Plus With 50MP camera launched in India: check Price, specifications, availability'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X