மொத்த மார்கெட்டும் அதிருது.. ரூ.15000 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
வெறும் ரூ.15000 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 50 எம்பி கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23 Plus) போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (Itel S23 Plus Specification): இந்த ஐடெல் போன் 6.78 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

அதோடு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் வருகிறது. இதுவொரு 59 டிகிரி 3டி கர்வ்ட் (3D Curved) டிஸ்பிளேவாகும். இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) கொண்ட ஆக்டா-கோர் யூனிசோக் டைகர் டி616 12என்எம் (Octa-core Unisoc Tiger T616 12nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி 57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடெல் போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
ஆகவே, 50 எம்பி சூப்பர் கிளியர் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் 10X ஜூம் (10X Zoom), சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஐ டிராக்கிங் மோட் (Eye Tracking Mode), போர்ட்ராய்டு லைட் (Portrait Lite) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் ஏஐ பியூட்டி செல்பீ (AI Beauty Selfie) மோட் வருகிறது. இந்த ஐடெல் போனில் ஏவியானா (Aivana) என்னும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடலில் டைனாமிக் பார் (Dynamic Bar) என்னும் புதிய நோட்டிபிகேஷன் அம்சம் வருகிறது.
இது ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே இருக்கிறது. இந்த போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த போன் கர்வ்ட் டிசைன் கொண்டிருப்பதால், மிகவும் ஸ்லிமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பேட்டரியுடன் சேர்ந்து வெறும் 178 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.
அதேபோல 7.9 மிமீ அகலம் மட்டுமே இருக்கிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. இந்த போன் லேக் சியான் (Lake Cyan) மற்றும் எலிமெண்டல் ப்ளூ (Elemental Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போன் ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
அங்கு இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு மலிவான விலையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன் விற்பனைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதனால் மற்ற நாடுகளில் உள்ள ஐடெல் பிரியர்கள், அந்த போனின் வெளியீட்டுக்காக காத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் ஐடெல் எஸ்23 பிளஸ் போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல எக்ஸ் (X) தளத்திலும் அந்த போன் ரூ.15,000 பட்ஜெட்டில் இந்தியாவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








