Home
Mobile

விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.15000 கூட இல்ல.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 32MP செல்பீ.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே திக்குமுக்காடும் விலையில் வெறும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 32எம்பி செல்பீ, 16ஜிபி மெமரி, 18W சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23 Plus) போன் வெளியாகயிருக்கிறது.

இந்த போனின் வெளியீட்டு தேதி இப்போது, கசிந்துள்ளது. இவ்வளவு மலிவான விலையில், இப்படிவொரு போன் விற்பனைக்கு வருவது, இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவவனங்களையே வியப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை பின்வருமாறு.

ரூ.15000 கூட இல்ல.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 32MP செல்பீ.. எந்த போன்?

ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (Itel S23 Plus Specification): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி616 12என்எம் (Octa Core Unisoc T616 12nm) சிப்செட் வருகிறது. இந்த பட்ஜெட்டில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாலி - ஜி 57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடெல் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி சூப்பர் கிளியர் (Super-Clear) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் 10X ஜூம் (10X Zoom), ஐ டிராக்கிங் மோட் (Eye Tracking Mode), சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு லைட் மோட் (Portrait Lite Mode) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக ரூ.15,000 பட்ஜெட்டில் கர்வ்ட் டிஸ்பிளேவுடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஏஐ பியூட்டி செல்பீ (AI Beauty Selfie) மோட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் செல்பீ போட்டோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் அவுட்புட் கிடைக்கும்.

இந்த ஐடெல் போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த மாடல் மிகவும் ஸ்லிமான டிசைனில் பேட்டரியுடன் சேர்ந்தே வெறும் 178 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. இதன் அகலம் 7.9 மிமீ மட்டுமே இருக்கிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சப்போர்ட் வருகிறது.

இந்த போன் கிளிட்டெரிங் பேனலுடன் எலிமெண்டல் ப்ளூ (Elemental Blue) மற்றும் லேக் சியான் (Lake Cyan) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போன் நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அங்கு, இதன் விலை வெறும் ரூ.15,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் அம்சங்களை இந்த போன் கொண்டிருப்பதால், இந்தியாவில் அந்த போனுக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டிவிடும் விதமாக வரும் செப்டம்பர் 26ஆம் தேதி அந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஐடெல் பிரியர்கள் இந்த போனுக்காக காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel S23 Plus With 16GB RAM, 5000mAh Tipped to Launch September 26 in India Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X