Home
Mobile

தர லோக்கல் பட்ஜெட்.. வெறும் ரூ.12,749 போதும்.. 16GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 32MP செல்பீ.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்காத விலையில் 16ஜிபி ரேம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 32எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23 Plus) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (Itel S23 Plus Specifications): இந்த ஐடெல் போனில் 6.78 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.12,749 போதும்.. 16GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 32MP செல்பீ.. எந்த மாடல்?

இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிபி-பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது. இதற்கு கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு (Gorilla Glass 5 Protection) வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 8 ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.

எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் ஐடெல் ஓஎஸ் 13 (Itel OS 13) வருகிறது. அதோடு ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12 என்எம் (Octa-Core UNISOC T616 12nm) சிப்செட் வருகிறது.

மாலி ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ (AI) செகண்டரி கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் வருகிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் டைம் லேப்ஸ், எச்டிஆர், அல்ட்ரா ஸ்டெடி போன்ற பல்வேறு முக்கியமான மோட்கள் வருகின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In Display Fingerprint Scanner)கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் ஜி சென்சார் (G Sensor) வருகிறது.

இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி 32 நாட்களுக்கு ஸ்டாண்ட்-பை டைம் கொடுக்கக்கூடியது. அதேபோல 112 மணி நேரம் மீடியா பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது. இதற்கு டைப் - சி (Type -C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி (NFC) போன்றவை வருகின்றன. இந்த போன் 7.9எம்எம் தடிமன் கொண்டுள்ளது.

இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போன் எலிமெண்ட்டல் ப்ளூ (Elemental Blue), லேக் சியான் (Lake Cyan) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ.13,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு ரூ.1250 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். ஆகவே, வெறும் ரூ.12,749க்கு இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போன் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel S23 Plus With 16GB RAM, 3D Curved Display Sale on Amazon in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X