ஐடெல் S23+ ஸ்மார்ட்போன் ரிவ்யூ: பட்ஜெட் விலையில் நம்ப முடியாத அம்சங்கள்!
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் ப்ரீமியம் டிசைன், கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் போன்ற ஹை-எண்ட் அம்சங்களை எதிர்பார்க்க்க கூடாது என்கிற பேச்சுக்கள் இனி இந்திய சந்தையில் எடுபடாது.
ஏனென்றால், மேற்கண்ட ஹை-எண்ட் அம்சங்கள் மற்றும் இன்ன பிற முக்கிய அம்சங்கள் உடன் ஐடெல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் எஸ்23 பிளஸ் (itel S23 Plus) என்கிற மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நேரத்திற்கு.. ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழத்தோன்றி இருக்கும்! அதற்கான பதில்களை வழங்கும்.. ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரிவ்யூ இதோ:
ஐடெல் எஸ்23 பிளஸ் இந்திய விலை நிர்ணயம்: ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையை பற்றி பேசும் முன்னர், கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகமான ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மற்றும் லாவா அக்னி 2 ஸ்மார்ட்போனின் விலைகளை பற்றி நாம் பேசியே ஆகவேண்டும்.
மேற்கண்ட 2 ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் முறையே ரூ.30,000 க்குள் மற்றும் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் உள்ளன. ஆனால் ஐடெல் நிறுவனம் கர்வ்டு டிஸ்பிளேவை பட்ஜெட் பிரிவில், அதுவும் வெறும் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்துள்ளது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

ஐடெல் எஸ்23 பிளஸ் வடிவமைப்பு: வடிவமைப்பை பொறுத்தவரை, ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் லேக் சியான் கலர் ஆப்ஷன் மிகவும் பளபளப்பான தோற்றத்தை உறுதி செய்கிறது; இது எலிமெண்டல் ப்ளூ கலர் ஆப்ஷனிலும் வெளியாகியுள்ளது. ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பேக் இருந்தாலும் கூட, கையில் பிடித்து இருக்கும் போது பிரீமியத்தை உணர்வை தருகிறது.
ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 7.9மிமீ ஸ்லிம் டெப்த் பாடியை கொண்டுள்ளது. ரியர் பேனலின் மேல் இடது பக்கத்தில் ஒரு பெரிய கேமரா ஐலேண்ட் உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அதுவொரு ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை போல காட்சி அளிக்கும். ஆனால் அதில் இரண்டு கேமரா சென்சார்கள் மட்டுமே உள்ளது. மூன்றாவதாக இருப்பது எல்இடி பிளாஷ் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஹெட்ஃபோன் ஜாக் இடம்பெறவில்லை. ஒருவேளை செலவை குறைப்பதற்காக இது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். இது தவிர, போனின் அடிப்பகுதியில் டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில், மைக் மற்றும் சிம் ஸ்லாட் ஆகியவைகள் உள்ளன. வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது.

ஐடெல் எஸ்23 பிளஸ் டிஸ்பிளே: இதுதான் இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சம் என்றே கூறலாம். இது 6.78-இன்ச் அளவிலான 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் பேக் செய்கிறது. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இப்படி ஒரு டிஸ்பிளே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.
ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் மிகவும் மெல்லிய பெஸல்களே உள்ளன. குறிப்பாக வலது மற்றும் இடது பக்கங்களில் இருக்கும் கர்வ்டு டிஸ்பிளேவின் விளைவாக, அங்கே இருக்கும் பெஸல்கள் இன்னும் மெல்லியதாக காட்சி அளிக்கின்றன. கீறல்களிலிருந்து டிஸ்பிளேவை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனும் உள்ளது.
ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்டாண்டர்ட் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு, ஒரு நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க இதுவே போதுமானதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் இன்னொரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், இதன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் தான்!
ஐடெல் எஸ்23 பிளஸ் ப்ராசஸர், ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: இது யுனிசாக் டி616 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி எல்பிடிடிஆர்4x ரேம் மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இது 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடனும் வருகிறது.
இவைகள் அனைத்தும் சேர்த்து ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனை அன்றாட பயன்பாடு மற்றும் நியாயமான கேமிங் செயல்திறனை வழங்குகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஐடெல்ஓஎஸ் உடன் வருகிறது. யூஸர் இன்டர்பேஸை பொறுத்தவரை, மென்மையாக இருக்கிறது.

ஐடெல் எஸ்23 பிளஸ் ரியர் மற்றும் செல்பீ கேமரா: கேமராக்களை பொறுத்தவரை ஐடெல் எஸ்23 பிளஸ் ஆனது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இதன் ரியர் மற்றும் செல்பீ கேமரா ஆகிய இரண்டுமே விலைக்கு ஏற்ற அவுட்புட்களை வழங்குகிறது என்றே கூறலாம். கேமரா அம்சங்களை பொறுத்தவரை, ரியர் கேமராவில் பியூட்டி, போர்ட்ரெயிட், சூப்பர் நைட், அல்ட்ரா எச்டி, ஏஆர் ஷாட், ப்ரோ, பனோரமா மற்றும் டைம் லேப்ஸ் போன்றவைகள் உள்ளன.

ஐடெல் எஸ்23 பிளஸ் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்: பேட்டரியை பொறுத்தவரை ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜர் உடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 5000mAh பேட்டரியும், 18W பாஸ்ட் சார்ஜிங்கும் மிகவும் நியாமான அம்சங்களாகும்.
ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? எஸ்23 பிளஸ் மாடலின் அறிமுகமானது இந்திய சந்தையில் ஐடெல் நிறுவனத்தின் புதிய அத்தியாயத்தை தொடக்கம் என்றே கூறலாம். வெறும் ரூ.13,999 க்கு பெரிய கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற அம்சங்கள் உண்மையிலேயே பெரிய விஷயங்கள் ஆகும். ஆக பட்ஜெட் வாசிகள் இதை நம்பி வாங்கலாம்!


Click it and Unblock the Notifications








