ஒன்னுல 2 வாங்கலாம்! ரூ.8,799 விலையில் 16GB ரேம், 50MP கேமரா! எந்த போன் தெரியுமா?
இந்தியாவில் எந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைத்து பார்த்திராத விலையில் ஐடெல் (itel) நிறுவனத்தின், ஐடெல் எஸ் 23 (itel S23) போன் வெளியாக இருக்கிறது. ரூ.8,799 விலையில் 16GB ரேம், 50MP கேமரா என்று அம்சங்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது.
இந்த போனின் மற்ற அம்சங்கள் கூட வியக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு மலிவான விலையில், பெரும்பாலான அம்சங்கள் உடன் வெளியாகும் முதல் போனாக, ஐடெல் எஸ் 23 இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போனின் மற்ற அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் பின்வருமாறு.

ஐடெல் எஸ் 23 அம்சங்கள் (itel S23 Specification): இந்த போன் 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என 16 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வருகிறது. அதேபோல, 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் என 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இருக்கிறது.
இந்த போன் டூயல் கேமரா (Dual Camera) செட்டப் கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி பிரைமரி கேமரா 10x ஜூமிங் அம்சத்துடன் வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் இருப்பதாக தெரிகிறது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) சப்போர்ட் உள்ளது. செல்பீ கேமரா குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால், 16 எம்பியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
டைப் - சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி 10W சார்ஜிங் வசதி உடன் வருகிறது. இந்த போன் ஐடெல் ஓஎஸ் 8.6 (itel OS 8.6) கொண்டுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் சிப்செட் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், யுனிக்எஸ்ஓசி டி606 (Unisoc T606) பிராசஸர் கொடுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.
சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வருகிறது. வைட் (White), பிங்க் (Pink), பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.
இந்த போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போனின் 3டி பேக் பேனல், மல்டிபிள் ரேடியேஷன் கலர்களில் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. அமேசானில் ரூ.8,799 விலையில் விற்பனையாக செய்யப்பட உள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இவ்வளவு மலிவான விலையில், இவ்வளவு அம்சங்களுடன் ஒரு போன் வெளியாவது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications