Home
Mobile

பட்டைய கிளப்பும் ஐடெல்.. சிங்கிள் சார்ஜில் 15 நாள் பேட்டரி.. டைப்-சி சார்ஜிங்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் போன்களை அறிமுகம் செய்தாலும் தரமான அம்சங்களை வழங்குகின்றன. இந்நிலையில் ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஐடெல் பவர் 450 எனும் பீச்சர் போன் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பீச்சர் போன் ஆனது நீண்ட நாள் பேட்டரி பேக்கப் வழஙகும். அதேபோல் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. இப்போது ஐடெல் பவர் 450 மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்டைய கிளப்பும் ஐடெல்.. டைப்-சி சார்ஜிங்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஐடெல் பவர் 450 அம்சங்கள் (itel Power 450 Specification): 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஐடெல் பவர் 450 பீச்சர் போன். மேலும்320 x 240 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. மற்ற பீச்சர் போன்களை விட சற்று பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஐடெல் போன் வெளிவந்துள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் எம்டிகே6261டி பிராசஸர் (MediaTek MTK6261D processor) உடன் இந்த அட்டகாசமான ஐடெல் பவர் 450 பீச்சர் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஐடெல் பவர் 450 போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐடெல் பவர் 450 பீச்சர் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பீச்சர் போன் ஆனது டி9 கீபேடு ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் டீப் ப்ளூ, டார்க் கிரோ, லைட் க்ரீன் போன்ற நிறங்களில் இந்த ஐடெல் பவர் 450 மாடல் விற்பனைக்கு வரும்.

தரமான ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஐடெல் பவர் 450 பீச்சர் போன். மேலும் இந்த போனின் பின்புறம் டிஜிட்டல் கேமரா வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் டார்ச் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்தி மற்றும் ஆங்கில ஆதரவு கொண்ட கிங் வாய்ஸ் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் ஆப் (King Voice speech-to-text app ) வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் பவர் 450 பீச்சர் போனில் வயர்லெஸ் எஃப்எம் (wireless FM), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) மற்றும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட ஒன்பது மொழிகளுக்கான ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான ஐடெல் பவர் 450 பீச்சர் போன் மாடல்.

பட்டைய கிளப்பும் ஐடெல்.. டைப்-சி சார்ஜிங்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஐடெல் பவர் 450 பீச்சர் போனின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது சார்ஜ் தான். அதாவது இந்த போன் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB-C charging port) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 2500எம்ஏஎச் பேட்டரி ( 2500mAh battery) கொண்டுள்ளது இந்த போன். எனவே இதை சார்ஜ் செய்தால் 15 நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது ஐடெல் பவர் 450 பீச்சர் போன் மாடலை ரூ.1500 விலையில் வாங்க முடியும். ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஐடெல் பவர் 450 பீச்சர் போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Power 450 with Type-C Charging Launched in India: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X