Home
Mobile

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.7249 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.7249 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல் அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட ஐடெல் பி55டி (itel P55T) போனின் ஆர்டர் பிச்சிக்கிட்டு போகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடைக்கும் டிஸ்கவுண்ட்டில் அடிமட்ட விலைக்கு வந்துள்ளது. இந்த ஐடெல் பி55டி போனின் முழு பீச்சர்கள் எப்படி? பிளிப்கார்ட்டில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

தீபாவளி வந்துவிட்டாலே, மொபைல் போன்களின் விற்பனை பட்டையை கிளப்ப தொடங்கிவிடுகிறது. இந்த விற்பனையில் 6000mAh பேட்டரி கொண்ட மொபைலை அடிமட்ட விலையில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஐடெல் பி55டி போன் பக்காவான ஆப்ஷனாக இருக்கிறது. ஏனென்றால், பேட்டரி மட்டுமல்லாமல் மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது.

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.7249 போதும்.. 6000mAh பேட்டரி மாடல்!

ஐடெல் பி55டி அம்சங்கள் (itel P55T Specifications): இந்த ஐடெல் போனில் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 267 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் பேக் செய்துள்ளது.

டைனாமிக் பார் பீச்சர் வருவதால், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) டிசைன் கொண்டுள்ளது. பட்ஜெட் போன்களில் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி606 12 என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.

இந்த ஐடெல் பி55டி போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் கூடுதல் கேமரா பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஆகவே, 50 எம்பி டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உள்ளது. ஏஐ செகண்டரி கேமரா மற்றும் ஆரா எல்இடி பேக் செய்துள்ளது. இந்த கேமராவில் ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait), ப்ரோ மோட் (Pro Mode), சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) வருகிறது. ஆகவே, கேமராவில் கூடுதல் பர்ஃபாமென்ஸ் கிடைக்கலாம்.

இந்த ஐடெல்லில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பக்கா பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி (Type-C Port) சப்போர்ட் உள்ளது. 9.2 எம்எம் ஸ்லிம் பாடி மற்றும் பிரீமியம் டிசைனில் அஸ்ட்ரல் கோல்டு (Astral Gold) மற்றும் அஸ்ட்ரல் பிளாக் (Aurora Black) கலர்களில் கிடைக்கிறது.

ஐடெல் பி55டி பிளிப்கார்ட் விற்பனை (itel P55T Flipkart Sale): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 8,199ஆக இருந்தது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel P55T With 50MP Camera Gets 28 Percent Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X