விஸ்வரூப மாடல்.. ரூ.8,999 பட்ஜெட்ல 24GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மார்கெட் மிரளும் பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, 24 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான கேம் பூஸ்டர் டெக்னாலஜி கொண்ட ஐடெல் பி55 (itel P55) போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
ஐடெல் பி55 அம்சங்கள் (itel P55 Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் கொண்ட 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் வருகிறது. பேட்டரி மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) அனிமேஷன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த போனில் 4 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் (16 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடெல் பி55 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐடெல் பி55 போனில் கேமிங் பூஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஐடெல் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு செகண்டரி ஏஐ கேமரா (Secondary AI camera) வருகிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), எப்எம் ரேடியோ (FM Radio) வருகிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. இதுவொரு 4ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, டூயல் 4ஜி (Dual 4G) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. மூன்லைட் பிளாக் (Moonlit Black), அரோரா ப்ளூ (Aurora Blue) மற்றும் பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold) ஆகிய 3 கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் பி55 போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. இந்த போன் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மிரளவிடும் ரேம் அம்சம் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








