ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.8,549 பட்ஜெட்ல 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி சப்போர்ட்டுடன் ஐடெல் பி55 (Itel P55) போன் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐடெல் பி55 அம்சங்கள் (Itel P55 Specifications): இந்த ஐடெல் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடெல் பி55 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த மெயின் கேமராவில் ஏஐ ஷாட் (AI Shot), சூப்பர் நைட் (Super Night), ஷார்ட் வீடியோஸ் (Short Videos) போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.
இந்த ஐடெல் பி55 5ஜி போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.

டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோ எஸ்டி சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலை கொண்டிருப்பதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) வருகிறது. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடெல் பி55 மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்விட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த மாடல் கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், இப்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு, பட்டாசான டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

அதாவது, ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட்டும், ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை ஐசிஐசியை பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, இந்த ஐடெல் பி55 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.8,549க்கு வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications