ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.8,999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.8,999 விலையில் 12ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட ஐடெல் பி55 5ஜி (Itel P55 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐடெல் பி55 அம்சங்கள் (Itel P55 Specifications): இந்த ஐடெல் போன் 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஐடெல் போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது. இந்த ஐடெல் பி55 போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
அந்த வகையில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் சூப்பர் நைட் (Super Night), டைம் லேப்ஸ் (Time Lapse), ஏஐ ஷாட் (AI Shot), பனோரமா (Panorama) மற்றும் ஷார்ட் வீடியோஸ் (Short Videos) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) வருகிறது. இந்த ஐடெல் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு யுஎஸ்பி டைப் - சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போனின் கனெக்விட்டி அம்சங்களை பார்க்கையில், 10 பேண்ட் சப்போர்ட் கொண்ட 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.
இந்த ஐடெல் பி55 போன் கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,699ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 4) அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக சலுகையாக எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.8,999க்கு வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு மலிவான விலையில் 5ஜி போன் விற்பனை செய்யப்படுவது, இதுவே முதல்முறையாகும்.


Click it and Unblock the Notifications








