ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.9,499 பட்ஜெட்ல 16GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐடெல் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக 24ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட ஐடெல் பி55 போனானது ரூ.8499க்கும், 16ஜிபி ரேம், லெதர் பேனல், 45W சார்ஜிங் கொண்ட ஐடெல் பி55 பிளஸ் போனானது, ரூ.9,499க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐடெல் பி55, பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55, P55 Specifications): இந்த போன்களில் 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் மற்றும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு கேமிங் பூஸ்ட் டெக்னாலஜி (Gaming Boost Technology) வருகிறது.
ஐடெல் பி55 போனில் 12 ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 8ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் (8ஜிபி ரேம் + 16ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.
ஐடெல் பி55 பிளஸ் போனில் 16 ஜிபி ரேம் (8ஜிபி ரேம் + 8ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இந்த பி55 பிளஸ் போனிலும் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டுள்ளது. இந்த ஐடெல் பி55 சீரிஸ் போன்கள் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளன. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி ஏஐ கேமரா (Secondary AI camera) வருகிறது.

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஃஎப்எம் ரேடியோ மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. இரண்டு போன்களும் 4ஜி வேரியண்ட்களாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டி, வை-பை 802, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் வருகின்றன.
இருப்பினும், ஐடெல் பி55 பிளஸ் வேரியண்ட்டில் மட்டும் என்எப்சி (NFC) சப்போர்ட் வருகிறது. ஐடெல் பி55 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஐடெல் பி55 பிளஸ் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
அதேபோல ஐடெல் பி55 போனில் மூன்லிட் பிளாக் (Moonlit Black), அரோரா ப்ளூ (Aurora Blue), பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold) ஆகிய கலர்களும் பி55 பிளஸ் போனில் ராயல் கிரீன் (Royal Green), மற்றும் மீடியர் பிளாக் (Meteor Black) ஆகிய 2 கலர்களும் வருகின்றன.
ஐடெல் பி55 போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8999ஆகவும் இருக்கிறது. அதோடு ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.6999 விலைக்கு 4ஜிபி மாடலை வாங்கலாம்.
ஐடெல் பி55 பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9999ஆக இருக்கிறது. இந்த போனுக்கும் ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.9499 விலைக்கு 8ஜிபி மாடலை வாங்கலாம். இந்த போன்கள் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications