Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.7560 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆர்டருக்கு மேல ஆர்டருனு வெச்சி செஞ்சிட்டாங்கபா, அப்படினு சொல்லும்படியான டிஸ்கவுண்ட்டில் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான ஐடெல் பி55 பிளஸ் (itel P55 Plus) போன் கிடைக்கிறது. ரூ.9999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்த இந்த ஐடெல் வேரியண்ட் இப்போது அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.8000 பட்ஜெட்டைவிட அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த ஐடெல்லின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

ரூ.10000 பட்ஜெட்டில் கிடைக்கும் போன்களில் டூயல் டோன் வேகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது இந்த ஐடெல் பி55 பிளஸ் மாடல். இதனாலேயே விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இதுபோக ரேம் மற்றும் மெமரியில் ஐடெல் பிரியர்களே எதிர்பார்க்காதபடி 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.7560 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா மாடல்!

ஐடெல் பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55 Plus Specifications): டிசைனில் பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியம் கிடைக்கும். ராயல் கிரீன் (Royal Green) கலர் வேரியண்ட்டில் டூயல் டோன் வேகன் லெதர் பேக் பேனல் கிடைக்கிறது. இதுபோக மீடியர் பிளாக் (Meteor Black) கலரும் இருக்கிறது. இதில் லெதர் பேனல் கிடையாது. க்ளோசி லுக் எதிர்பார்க்கலாம்.

பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் (Punch-hole Display Design) இந்த போன் வருகிறது. இதற்கு 8 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) ஆனது 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் பி55பிளஸ் போனில் லாக்-ப்ரீ அவுட்புட் எதிர்பார்க்க முடிகிறது.

ஏனென்றால், 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 128 ஜிபி மெமரி எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த ஐடெல்லில் 256 ஜிபி மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சிப்செட்டில் பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி இருக்கிறது.

ஆகவே, 12 என்எம் ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் வருகிறது. டிஸ்பிளேவில் வழக்கமான எல்சிடி (LCD) பேனலுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 6.6 இன்ச் டிஸ்பிளேவை இந்த போன் பேக் செய்துள்ளது. இந்த ஐடெல்லின் பேட்டரியை குறை சொல்ல முடியாது.

ஏனென்றால், இந்த பட்ஜெட்டுக்கு 15W அல்லது 18W சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்த ஐடெல் பி55 பிளஸ் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் (Fast Charging) 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆண்டார்ய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே இந்த பட்ஜெட்டில் கிடைத்து இருக்கிறது. சைடு பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் இருக்கிறது.

மேலும், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது. மேற்கண்ட பீச்சர்களுடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9999ஆக இருந்தது. இப்போது, அமேசானில் ரூ.7999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் ரூ.599 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.7560-க்கு வாங்கி கொள்ளலாம்.

இந்த பேங்க் டிஸ்கவுண்ட் ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால் மட்டுமே கிடைக்கிறது. இதற்கும் ஆர்பிஎல் மற்றும் ஐடிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். ரூ.7,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த போனுக்கு கிடைக்கிறது. ஆகவே, நம்ப முடியாத அடிமட்ட விலையில் வேகன் லெதர் போனை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
itel P55 Plus With 16GB RAM Sale Under Rs 8000 in Amazon Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X