ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.9,499 போதும்.. 16GB ரேம்.. AI கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐடெல் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக 16ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமீயம் லெதர் பினிஷிங் டிசைனில் ஐடெல் பி55 பிளஸ் (itel P55 Plus) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐடெல் பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55 Plus Specifications): இந்த ஐடெல் போனில் 6.6 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்டிருக்கிறது.

இந்த பீச்சரானது, ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் போல செயல்படுகிறது. ஆகவே, பேஸ் அன்லாக் (Face Unlock), பேக்ரவுண்ட் கால் (Background Call), லோவ் பேட்டரி ரீமைண்டர் (Low Battery Reminder) மற்றும் ஃபுல் சார்ஜிடு (Full Charged) ஆகியவற்றை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஐடெல் பி55 பிளஸ் போனில் 50 எம்பி சூப்பர் கிளியர் மெயின் கேமரா (Super Clear Main Camera) வருகிறது. அதோடு AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது. இந்த கேமராவில் ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait) பீச்சர் வருகிறது.
அதேபோல சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) வருகிறது. 8 எம்பி செல்பீ வருகிறது. இந்த ஐடெல் பி55 பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது.
இந்த போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (8ஜிபி ரேம் + 8ஜிபி டைனாமிக் ரேம்) கொண்ட வேரியண்ட விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஐடெல் பி55 பிளஸ் போனில் 45W ஹைபர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Hyper Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரியில், ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging) மற்றும் லோவ் டெம்ப் சார்ஜிங் (Low Temp Charging) போன்ற பீச்சர்கள் வருகின்றன. டைப்-சி சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த போனானது, பிரீமீயம் லெதர் டிசைன் (Premium Leather Design) கொண்டிருக்கிறது. அதோடு கிரீன் கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
மேலும், பிளாக் மற்றும் பிங்க் ஆகிய 2 கலர்களும் இருக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆக இருக்கிறது. ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் விற்னைக்கு வருகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மிகவும் கம்மியான விலையில், லெதர் பேக் பேனல், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50 எம்பி கேமரா போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், டைனாமிக் பார், கேமிங் பூஸ்ட் போன்ற பக்கா டெக்னாலஜி கொண்ட போன் வேண்டுமானால், ஐடெல் பி55 பிளஸ் மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








