தொக்கா தூக்கலாம்.. மலிவு விலையில் மீண்டும் புதிய 5ஜி போனை களமிறக்கும் itel.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் ஐடெல் நிறுவனம் சமீபத்தில் ஐடெல் பி55 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
குறிப்பாக இந்த ஐடெல் பி55 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் என்னவென்றால் 5ஜி ஆதரவு, 50எம்பி கேமரா மற்றும் தரமான சிப்செட் உடன் கம்மி விலையில் வெளிவந்தது. இந்த ஐடெல் பி55 போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஐடெல் பி55 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஐடெல் நிறுவனம்.

இந்நிலையில் ஐடெல் பி55 பிளஸ் (itel p55 plus) போனின் சில அம்சங்கள் கூகுள் பிளே கன்சோலில் வெளியாகி உள்ளது. அதன்படி P663L மாடல் நம்பரை கொண்டுள்ளது இந்த ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. மாலி ஜி52 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Spreadtrum T606 SoC சிப்செட் உடன் இந்த ஐடெல் பி55 பிளஸ் போன் அறிமுகமாகும்.
குறிப்பாக 50எம்பி ரியர் கேமரா, எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் பி55 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6080 6nm processor) கொண்டுள்ளது. இதனுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் பி55 5ஜி போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (HD+ IPS Display) வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன். 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging support) கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது.
அதேபோல் பச்சை மற்றும் நீல நிறங்களில் ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க முடியும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்ட்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐடெல் பி55 5ஜி போன். அமேசான் தளத்தில் இந்த ஐடெல் பி55 5ஜி போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








