Home
Mobile

தாராளமா வாங்கலாமே.. வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல.. 16GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்.. 45W சார்ஜிங்.. 50MP AI கேமரா!

என்னது..? ஒன்றின் விலை வெறும் ரூ.10,000.. இன்னொன்றின் விலை ரூ.11,000 தானா? இவ்வளவு மலிவான பட்ஜெடில்.. 16ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50எம்பி ஏஐ கேமரா உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறதா?

"இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?" என்று கூறவைக்கும் படியாக 2 புதிய ஸ்மார்ட்போன்கள் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன மாடல்கள்? என்னென்ன அம்சங்களை பேக்ஸ் செய்யும்? சரியாக என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுமாகும்? இதோ விவரங்கள்:

வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல.. 16GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்!

என்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ஐடெல் நிறுவனத்தின் பி சீரீஸ் பவர் பிளே ஸ்மார்ட்போன்களை (Itel P Series Power Play Smartphones) பற்றித்தான். இந்த சீரிஸின் கீழ் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது: ஐடெல் பி55 (Itel P55), ஐடெல் பி55 பிளஸ் (Itel P55 Plus) மற்றும் ஐடெல் பி55டி (Itel P55T).

இந்த மூன்று புதிய ஸ்மார்ட்போன்களில் ஐடெல் பி55 மற்றும் ஐடெல் பி55 பிளஸ் ஆகிய இரண்டும் பிப்.8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு, இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களும் (பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக) அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல.. 16GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்!

ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும். ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் 0 முதல் 70 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். மேலும் இதுஹைப்பர் சார்ஜ், ஸ்மார்ட் சார்ஜ் மற்றும் லோ-டெம்ப் சார்ஜ் என்கிற 3 லெவல் சார்ஜிங்கையும் வழங்கும்.

ஹைப்பர் சார்ஜ் விருப்பமானது பேட்டரியை விரைவாக நிரப்பும்; நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் 25 சதவீத பேட்டரியை நிரப்பும். ஸ்மார்ட் சார்ஜ் விருப்பமானது பயனரின் பயன்பாட்டு முறையின் அடிப்படையில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் ஏஐ-ஐ சார்ந்துள்ளது. லோ டெம்ப் சார்ஜ் விருப்பமானது, ஸ்மார்ட்போனை அதிகமாக வெப்பமடைய செய்யாமல் சார்ஜ் செய்யும்.

வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல.. 16GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்!

மேலும் ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனானது விர்ச்சுவல் ரேம் உட்பட மொத்தம் 16ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் மற்றும் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். கூடுதலாக ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்களில் ஒன்று - டூயல் டோன் பினிஷ் லெதர்-டெக்ஷர்டு போர்ஷன கொண்டுள்ளது.

ஐடெல் பி55 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 256ஜிபி இன்டர்னல் ஸ்டாராஜுடன் வரும். இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, இதில் 18W சார்ஜிங் இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி பேனல் இடம்பெறும். கடைசியாக இது 5000mAh பேட்டரியை பேக் செய்யும்.

ஐடெல் பி55 சீரீஸில் உள்ள மூன்றாவது மாடலான ஐடெல் பி55டி (Itel P55T) ஸ்மார்ட்போன் ஆனது வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐடெல் பி55 மாடலுடன் பெரும்பாலான அம்சங்களை பகிர்ந்துகொள்ளும் என்றும், இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு 6,000mAh பேட்டரிஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடெல் பி55, ஐடெல் பி55 பிளஸ் விலை விவரங்கள்: இந்திய சந்தையில் ஐடெல் பி55 ஸ்மார்ட்போன் ரூ.9999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஐடெல் பி55 பிளஸ் மாடலானது ரூ.11,590 க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள் பிப்.8 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்தின் போது அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel P55 Plus and Itel P55 Smartphones Launching in India on February 8 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X