Home
Mobile

அப்படி போடு.. ரூ.10,000 போதும்.. முதல் 5ஜி போனை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் இதுவரை 4ஜி ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து வந்தது. இந்நிலையில் தனது முதல் 5ஜி ஸமார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது ஐடெல் நிறுவனம். அதாவது 91மொபைல்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ஐடெல் நிறுவனம் ஐடெல் பி55 எனும் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தியாவில் ரூ.10,000 க்கும் குறைந்த விலையில் ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் விலைப் பற்றிய தகவல் மட்டும் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.

முதல் 5ஜி போனை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்.. எந்த மாடல்?

மேலும் ஐடெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐடெல் பி40 பிளஸ் போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். ஐடெல் பி40 பிளஸ் போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1,640 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஐடெல் பி40 பிளஸ் (Itel P40+)போனில் ஆக்டோ-கோர் Unisoc T606 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக நோக்கியா போன்களில் கூட இந்த Unisoc சிப்செட் தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

7000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஐஸ் சியான் நிறங்களில் இந்த புதிய ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் 5ஜி போனை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்.. எந்த மாடல்?

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐடெல் பி40 பிளஸ் போனின் விலை ரூ.8,099-ஆக உள்ளது

அதேபோல் விரைவில் ஐடெல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 5ஜி போன் ஆனது கம்மி விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஐடெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel P55 5G to launch soon in India under Rs 10,000 : check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X