Home
Mobile

ரூ.9,699 போதும்.. 50எம்பி கேமரா.. 8GB ரேம்.. Dimensity 6080.. அறிமுகமானது Itel 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தி உள்ளது. அதாவது தற்போது இந்தியாவில் ஐடெல் பி55 மற்றும் ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது ஐடெல் நிறுவனம். இந்த இரண்டு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,699-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்த ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

அறிமுகமானது ஐடெல் 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐடெல் பி55 5ஜி அம்சங்கள் (Itel P55 5G specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor)கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6080 6nm processor) கொண்டுள்ளது இந்த போன். இதனுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்ட்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐடெல் பி55 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அதேபோல் இந்தியாவில் மிகவும் கம்மி விலையில் அறிமுகமான 5ஜி போன் என்றால் அது இந்த ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் தான். எனவே இந்தியச் சந்தையில் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel P55 5G launched in India at price of Rs 9,699: check specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X