சொல்லாம கொள்ளாம 7,000mAh பேட்டரி கொண்ட சூப்பர் போனை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! விலை ரொம்ப கம்மி.!
ஐடெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐடெல் நிறுவனம் 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஐடெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஐடெல் பி40 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐடெல் பி40 பிளஸ் போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1,640 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த புதிய ஐடெல் பி40 பிளஸ் (Itel P40+)போனில் ஆக்டோ-கோர் Unisoc T606 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக நோக்கியா போன்களில் கூட இந்த ருெளைழஉ சிப்செட் தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

7000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஐஸ் சியான் நிறங்களில் இந்த புதிய ஐடெல் பி40 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐடெல் பி40 பிளஸ் போனின் விலை ரூ.8,099-ஆக உள்ளது. பின்பு ஜூலை 11-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








