அசூர விற்பனை.. வெறும் ரூ.7,559 போதும்.. 7000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 7000mAh பேட்டரி போன்ற கிடைக்காத அம்சங்களுடன் ஐடெல் பி40 பிளஸ் (Itel P40 Plus) போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (Itel P40 Plus Specifications): இந்த ஐடெல் போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெயின் கேமராவில் எச்டிஆர், டைம் லேப்ஸ் மற்றும் ப்ரோ போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐடெல் போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை விலைக்கு ஏற்ப நன்றாகவே இருக்கிறது. அந்த வகையில், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் உள்ளது.
அதேபோல 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் பிரம்மாண்டமாக 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப் - சி சார்ஜிங் (Type-C Charging) வருகிறது.
இதுவொரு பட்ஜெட் விலை போன் என்பதால், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இந்த போன் 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.0 மற்றும் வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐடெல் போனில் ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஐஸ் சியான் (Ice Cyan) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,399ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வளவு அம்சங்களுக்கு இதுவே கம்மி விலையென்பதால், இந்த போனின் விற்பனை சக்கைப்போடு போட்டது. இப்போது, பிளிப்கார்ட் தள்ளுபடியில் அதைவிட மலிவான விலைக்கு வந்து, ஐடெல் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது.
இந்த ஐடெல் போனை பிளிப்கார்ட்டில் கனரா பேங்க் கிரெடிட் கார்டு (Canara Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.840 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.7,559க்கு வாங்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








