அடிச்சு தூக்கும் ஆர்டர்.. வெறும் ரூ.7,289 போதும்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி, 7000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ஐடெல் பி40 பிளஸ் (Itel P40+) போனுக்கு மிரட்டலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (Itel P40 Plus Specifications): இந்த ஐடெல் போனில் 6.8 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி ஐபிஎஸ் (LCD IPS) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இந்த ஐடெல் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த கேமராவில் எச்டிஆர் மோட் (HDR Mode), டைம் லேப்ஸ் மோட் (Time Lapse Mode) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) போன்றவை வருகின்றன.
இந்த போனுக்கு சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த விலையில், இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட போன் கிடைக்கிறது என்றால், அது ஐடெல் பி40 பிளஸ் மட்டுமேயாகும். இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதோடு ஏஐ பவர் சேவிங் கன்ட்ரோல் (AI Power Saving Control) டெக்னாலஜி இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, பேட்டரி பேக்கப் தொடர்பான எந்தவொரு கவலையும், இந்த போனில் இருக்காது. இந்த போன் ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஐஸ் சியான் (Ice Cyan) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடலில் 3.5 மிமீ ஹெட் போன் ஜாக், ப்ளூடூத் 5.0, வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகிறது.
இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை வெறும் ரூ.8,099ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலைக்கு 7000mAh பேட்டரி கொண்ட கிடைப்பது இதுவே முதல்முறை என்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த விற்பனையை மேலும் சூடுபிடிக்க வைக்கும்படி அமேசான் (Amazon) தளத்தில் மிரட்டலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனுக்கு, ரூ.809 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.400 கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த டிஸ்கவுண்ட்கள் போக வெறும் ரூ.7,289க்கு 8 ஜிபி ரேம், 7000mAh பேட்டரி கொண்ட இந்த போனை வாங்கிக்கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








