ஆளுக்கொன்னு வாங்கலாம்! ரூ.9000 பட்ஜெட்டில் 7,000mAh பேட்டரி.. டிசைனும் சும்மா தெறிக்குது! எந்த மாடல்?
இந்தியாவில் முதல் முறையாக ரூ.9,000 பட்ஜெட்டில் 7,000mAh பேட்டரி கொண்ட ஐடெல் (itel) நிறுவனத்தின் ஐடெல் பி40 பிளஸ் (itel P40+) போன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் மற்ற அம்சங்களும் பின்னி எடுக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பெரிய தலைவலியாக இருப்பது, பேட்டரி மட்டுமே. ப்ளாக்ஷிப் சிப்செட், கேமரா, கிராபிக்ஸ் கார்டு என்று கொண்டிருந்தாலும், பேட்டரி உடனே குறைந்தால், பல நேரங்களில் கடுப்பாகிவிடும். இதனால் நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போனை வாங்கக் கூட சிலர் திட்டம்போட்டிருக்கலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கும், மலிவு விலையில் நல்ல அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் நல்ல சாய்ஸாக வருகிறது, ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் பி40 பிளஸ் போன். இந்த ஐடெல் நிறுவனம் மலிவான போன்களை களமிறக்கி, இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரும் இடத்தை பிடித்து காத்திருக்கிறது. இப்போது, இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளது.
ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40+ Specifications): இந்த புதிய போன் 6.8 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) உடன் யுனிசோக் டி606 (Unisoc T606) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று மொத்தமாக 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட்டும் உள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED Flash) கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. அதன்படி, ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த போனில் முக்கிய அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த பேட்டரி மூலம் 41 மணி நேரம் காலிங் பேக்கப், 12 மணி நேரம் வீடியோ பேக்கப், 16 மணி நேரம் சேட்டிங் பேக்கப் கிடைக்கும் என்று ஐடெல் நிறுவனம் குறிப்பிடுகிறது.
இந்த ஐடெல் பி40 பிளஸ் போன், ரூ.9000 பட்ஜெட்டில் வெளியாகும் முதல் 7,000mAh பேட்டரி போனாகும். இவ்வளவு மலிவான விலையில், பெரிய பேட்டரி கொண்ட போன் விற்பனைக்கு வருவது, ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வேண்டும் என்றால், இந்த ஐடெல் பி40 பிளஸ் போனை தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்.
இந்த போன் பிளாக் (Black), கிரீன் (Green) கலர்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அமேசானில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால், அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) ஜூலை 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாட்களில் ஐடெல் பி40 பிளஸ் போன் விற்பனைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








