Home
Mobile

அடிச்சி புடிச்சி வாங்குவீங்க! ரூ.6299 விலையில் 8GB ரேம் போன்! ரூ.8000 விலையில் 7000mAh பேட்டரி போன்!

இந்திய மார்க்கெட்டில் முதல் முறையாக ஐடெல் (itel) நிறுவனம், ரூ.8000 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம், 7000mAh பேட்டரி கொண்ட போனையும், ரூ.6299 விலையில் 8ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட போனையும் களமிறக்குகிறது. இந்த போன்களின் விற்பனை தேதி குறித்த விவரங்கள் இதோ.

அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) ஜூலை 15ஆம் தேதி தொடங்குகிறது. வெறும் 2 நாட்கள் மட்டுமே விறுவிறுப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நாட்களில் மிஸ் பண்ணக்கூடாதா வகையில், 2 மலிவு விலை பட்ஜெட் போன்கள் அட்காசமான அம்சங்களுடன் களமிறங்கி ஸ்மார்ட்போன் பிரியர்களை பிரம்மிக்க வைக்கப்போகிறது.

ரூ.8000 விலையில் 7000mAh பேட்டரி போன்! ரூ.6299 விலையில் 8GB ரேம் போன்!
ஏனென்றால், இதுவரையில் வெளியான எந்த பட்ஜெட் போன்களிலும், இவ்வளவு அம்சங்கள் கொடுக்கப்படவில்லை. இந்த போன்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகி, விற்பனையில் சக்கைப்போடு போட்ட பின்பே, இந்தியா மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. இதனால் பட்ஜெட் விலையில் போன் வாங்க நினைப்பவர்களுக்கு, மலிவான பட்ஜெட்டிலேயே நல்ல போன் கிடைக்கப் போகிறது.

இந்த ஐடெல் பி40 பிளஸ் (itel P40+) மற்றும் ஐடெல் ஏ60 எஸ் (itel A60S) மாடல்களின் கேமரா, சிப்செட், டிஸ்பிளே போன்ற மற்ற அம்சங்கள் எப்படி இருக்கின்றன? இந்த போன்களை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்னும் முடிவுக்கு வர, அவற்றின் விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40+ Specifications): இந்த போன் 6.8 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) உடன் யுனிசோக் டி606 (Unisoc T606) சிப்செட் வருகிறது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டுள்ளது.

அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்று டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 7,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 41 மணி நேரம் காலிங் பேக்கப், 16 மணி நேரம் சாட்டிங் பேக்கப், 12 மணி நேரம் வீடியோ பேக்கப் கிடைக்கும். இந்த ஐடெல் பி40 பிளஸ் போன், வெறும் ரூ.8,099 பட்ஜெட்டில் வெளியாகிறது. இந்த பட்ஜெட்டில் வெளியாகும் முதல் 7,000mAh பேட்டரி இதுவாகும். இந்த போன் ஐஸ் சியன் (Ice Cyan), ஃபோர்ஸ் பிளாக் ( Force Black) கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

ஐடெல் ஏ60 எஸ் அம்சங்கள் (itel A60S Specifications): இந்த போன் 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஐடெல் பி40 பிளஸ் போனில் வந்தது போலவே 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டிருக்கிறது.

அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Unisock SC9863A1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனும் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்லது. 5W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த ஐடெல் போனும் வெறும் ரூ.6,299 பட்ஜெட்டில் வெளியாகிறது.

அந்த வகையில், ரூ.6,000 பட்ஜெட்டில் வெளியாகும் முதல் 8 ஜிபி ரேம் போன் இதுவாகும். இந்த போன் சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), ஷேடோ பிளாக் (Shadow Black), கிளேசியர் கிரீன் (Glacier Green), மூன்லைட் வயலட் (Moonlit Violet), ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel P40 Plus itel A60S Specifications Price in Amazon Prime Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X