Home
Mobile

ஆர்டர் பிச்சிக்க போகுது! பட்ஜெட் ரூ.10000 கூட கிடையாது! ஆனால், 8GB ரேம், 7000mAh பேட்டரி! ப்ரீ-புக்கிங் ரெடி!

ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலையில், 8ஜிபி ரேம் + 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் பி40+ (itel P40+) போன், எப்போது விற்பனைக்கு வரும் என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அந்த போனின் ப்ரீ-புக்கிங் தேதி வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில், ஐடெல் நிறுவனத்தின் எஸ்23 போன் மலிவான விலையில் வெளியாகி விற்பனையில் சக்கைப் போடுபோட்டது. இதனால், அந்த நிறுவனத்தின் அடுத்த போன்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனென்றால், ரூ.8000 விலையில் 8 ஜிபி ரேம், 7000mAh பேட்டரி கொண்ட ஐடெல் பி40 பிளஸ் போனும், ரூ.6299 விலையில் 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட ஐடெல் ஏ60 எஸ் போனும் லிஸ்ட்டில் இருக்கிறது.

பட்ஜெட் ரூ.10000 கூட கிடையாது! ஆனால், 8GB ரேம், 7000mAh பேட்டரி!

இந்த போன்கள் அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. இருப்பினும், உறுதி செய்யப்படவில்லை. இந்த சூழலில், ஐடெல் பி40 பிளஸ் போனின் ப்ரீ-புக்கிங் தேதி வெளியாகிவிட்டது. இதனால், ஐடெல் பிரியர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்பை கிளம்பும் அளவுக்கு, அந்த போனில் என்ன இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40+ Specifications): இந்த ஐடெல் போன் 6.8 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (LCD) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) உடன் யுனிசோக் டி606 (Unisoc T606) சிப்செட் வருகிறது.

4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் இருக்கிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் எச்டிஆர் மோட், ப்ரோ மோட் மற்றும் டைம் லேப்ஸ் மோட் இருக்கிறது. சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது. அதோடு பேஸ் அன்லாக் (Face Unlock) வசதியும் இருக்கிறது. இந்த போனில் முக்கிய அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 4 நாட்கள் பேக்கப் கிடைக்கும். அதோடு ஏஐ பவர் சேவின் கன்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஐடெல் பி40 பிளஸ் போனின் விலை கேட்டால், வியப்பாக இருக்கிறது. ரூ.8,099 விலையில் விற்பனைக்கு வருகிறது.

ஜூலை 14ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ப்ரீ-புக்கிங் தொடங்குகிறது. அமேசான் பிரைம் கஸ்டமர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் பிரைம் டே சேல் நாட்களில் மற்ற கஸ்டமர்களும் ஆர்டர் செய்துகொள்ள முடியும். மிகவும் மலிவான விலையில், நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போன் வாங்க வேண்டும் என்றால், இந்த போனை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் மட்டுமே நடக்கவிருப்பதால், விரைவில் ஆர்டர் செய்வது நல்லது. இந்த போனோடு ஐடெல் ஏ60 எஸ் போனும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel P40 Plus Available to Buy on Jul 14 Pre-Booking Starts For Amazon Prime Customers Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X