கொத்தா தூக்குவீங்க.. ரூ.8,000 விலைக்கு 7,000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 8GB ரேம் வந்தா யாரு விடுவா!
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே அதிரும்படி வெறும் ரூ.8,000 பட்ஜெட்டில், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே என்று ரூ.20,000 மதிப்புள்ள அம்சங்களுடன் ஐடெல் பி40 பிளஸ் (itel P40+) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான போன்களில், பேட்டரி பேட்டரி பேக்கப் ஒரு நாள் கூட கிடைப்பதில்லை. ஃபுல் சார்ஜ் செய்துவிட்டு எடுத்துச் சென்றாலும், வீடு திரும்பும் போது, 10 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிடும். ஆகவே, அதிக பேட்டரி பேக்கப் கொண்ட போன்களை வாங்கவே நம்மில் பலர் திட்டமிட்டிருப்போம்.

ஆனால், அவற்றின் விலை குறைந்தது ரூ.15 ஆயிரமாவது இருக்கும். ஆனால், ஐடெல் என்னும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் தனக்கென தனியிடம் பிடிக்க மலிவான விலையில், அதிக பேட்டரி பேக்கப் கொண்ட போன்களை களமிறக்கி வருகிறது. இப்போது, வியந்துபோகும் விலையில் 7,000mAh பேட்டரி போனை விற்பனைக்கு விட்டுள்ளது.
ஐடெல் பி40 பிளஸ் போனின் அம்சங்கள் என்ன? இந்த ஐடெல் போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொண்ட யுனிசோக் டி606 (Unisoc T606) சிப்செட் வருகிறது.
இந்த போன் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டுள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் எச்டிஆர் மோட் (HDR Mode), ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் டைம் லேப்ஸ் மோட் (Time-Lapse Mode) வருகின்றன. இந்த போனுக்கு சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட்டும் உள்ளது. இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால், தொடர்ந்து 4 நாட்கள் பேக்கப் கிடைக்கும் என்று ஐடெல் நிறுவனம் தெரிவிக்கிறது.
இதுமட்டுமல்லாமல், ஏஐ பவர் சேவிங் கன்ட்ரோல் (AI Power Saving Control) வசதி இருக்கிறது. இப்படி பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஐடெல் பி40 பிளஸ் போனின் விலை வெறும் ரூ.8,099 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது, அமேசான் பிரைம் டே சேல் தொடங்கியிருப்பதால், சற்று தள்ளுபடியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வெறும் ரூ.8000 பட்ஜெட்டில் 4 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வேண்டும் என்றால், இந்த ஐடெல் பி40 பிளஸ் போனை வாங்கிக்கொள்ளலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








