Home
Mobile

ரூ.7,000 பட்ஜெட்டில் 6.6-இன்ச் டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய itel போன் அறிமுகம்.!

இந்தியாவில் ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் பி40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஐடெல் போன் கம்மி விலையில் பெரிய டிஸ்பிளே, தரமான பேட்டரி வசதி, தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய போனின் விலை அம்சங்களை இப்போது பார்ப்போம்

என்னென்ன அம்சங்கள்? ஐடெல் பி40 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1612 X 720 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஐடெல் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரூ.7,000 பட்ஜெட்டில் புதிய itel போன் அறிமுகம்.!

புதிய ஐடெல் பி40 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் SC9863A பிராசஸர் வசதி உள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐடெல் பி40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் பி40 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐடெல் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா + விஜிஏ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் பி40 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.7,000 பட்ஜெட்டில் புதிய itel போன் அறிமுகம்.!

ஐடெல் பி40 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக ஐடெல் பி40 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். மேலும் புளூடூத், வைஃபை, 4ஜி, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் பி40 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

என்ன விலை? ஐடெல் பி40 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு இந்த போனை ஐடெல் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். பின்பு கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த ஐடெல் பி40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.7,000 பட்ஜெட்டில் புதிய itel போன் அறிமுகம்.!

அதேபோல் ஐடெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel P40 Launched in India Price Rs 7699 Sale Started Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X