இதைவிட கம்மினா சும்மாதான் கொடுக்கனும்: ரூ.2000க்கு itel Magic X Phone அறிமுகம்!

|

இந்திய சந்தையில் பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும். கீபேட் போன்களின் தேவை இருக்கத் தான் செய்கிறது. அதுமட்டுமில்லை எந்தவித பாதுகாப்பு சிக்கலும் இல்லாமலும் நமது நேரத்தை சுதந்திரமாகவும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு ஒரே தீர்வு கீபேட் போன் தான்.

மலிவு விலை கீபேட் போன்

மலிவு விலை கீபேட் போன்

ஒருசில கீபேட் போன்கள் விலையானது சற்று உயர்ந்த நிலையில் ஸ்மார்ட்போன் விலைக்கு இணையாக இருக்கிறது. அதேசமயத்தில் அந்த அளவிற்கான தரமும் தன்மையும் அதில் இருக்கும்.

இந்த நிலையில் itel நிறுவனம் மலிவு விலையில் கீபேட் போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த போனின் அம்சங்களும் உயர்ந்ததாகவே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

KingVoice அசிஸ்டென்ஸ் ஆதரவு

KingVoice அசிஸ்டென்ஸ் ஆதரவு

itel நிறுவனம் Magic X மற்றும் Magic X Play என்ற இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

itel Magic X இல் உள்ளமைக்கப்பட்ட வயர்லெஸ் FM ரேடியோ, LED டார்ச் மற்றும் KingVoice அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மேஜிக் எக்ஸ் போன்கள் ஆனது 4ஜி இணைப்பு ஆதரவையும் கொண்டிருக்கிறது.

மேஜிக் எக்ஸ் போனானது 1200 எம்ஏஎச் பேட்டரியையும், மேஜிக் எக்ஸ் ப்ளே போனானது 1900 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டிருக்கிறது.

music app Boomplay ஆதரவு

மேஜிக் எக்ஸ் ப்ளே மற்றும் மேஜிக் எக்ஸ் ஃபீச்சர் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக itel அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபீச்சர் போன்களானது டூயல் 4ஜி VoLTE உடன் LetsChat மற்றும் music app Boomplay ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

ஃபீச்சர் போன்களின் விலை விவரங்கள்

ஃபீச்சர் போன்களின் விலை விவரங்கள்

புதிதாக அறிமுகமான ஃபீச்சர் போன்களின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். Magic X போனானது ரூ.2099 எனவும் Magic X Play போனானது ரூ.2299 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு போன்களும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனின் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட்நைட் ப்ளாக் மற்றும் மின்ட் க்ரீன்

itel Magic X Play போனானது மிட்நைட் ப்ளாக் மற்றும் மின்ட் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் itel Magic X ஆனது மிட்நைட் ப்ளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

itel Magic X மற்றும் Magic X Play சிறப்பம்சங்கள்

itel Magic X மற்றும் Magic X Play சிறப்பம்சங்கள்

itel Magic X மற்றும் Magic X Play 4G VoLTE சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், itel Magic X Play ஆனது 1.77 இன்ச் 3D வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

Magic X ஆனது 2.4-இன்ச் 3D வளைந்த QVGA டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட் LED அலர்ட் உடன் கூடிய சிறிய அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு போன்களிலும் உள்ளமைக்கப்பட்ட வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, எல்இடி டார்ச் மற்றும் கிங்வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவைக் கொண்டிருக்கின்றன.

முன்னதாகவே குறிப்பிட்டது போல் இரண்டு போன்களும் 4ஜி இணைப்பைக் கொண்டிருக்கிறது.

48MB ரேம் மற்றும் 128MB இன்டெர்னல் ஸ்டோரேஜ்

48MB ரேம் மற்றும் 128MB இன்டெர்னல் ஸ்டோரேஜ்

மேஜிக் எக்ஸ் ஸ்மார்ட்போன்களானது முறையே 1900 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 1200 எம்ஏஎச் பேட்டரி பேக்கப் உடனான காம்பாக்ட் மேஜிக் எக்ஸ் ஃப்ளான்ட்களைக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 48MB ரேம் மற்றும் 128MB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இணைந்த T107 சிப்செட். மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. இந்த ஸ்லாட் மூலமாக 64ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

டூயல் சிம் ஆதரவுடன் VGA பின்புற கேமராக்கள்

டூயல் சிம் ஆதரவுடன் VGA பின்புற கேமராக்கள்

புதிய ஃபீச்சர் போன்களானது ஆங்கிலம், தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, அசாமிஸ் மற்றும் உருது ஆகிய மொழி ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

இரண்டு போன்களும் டூயல் சிம் ஆதரவுடன் VGA பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கின்றன.

Best Mobiles in India

English summary
itel Magic X, Magic X Play Phones launched in india at Low Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X