ரூ. 2349 விலையில் நம்பி வாங்குற மாதிரி ஒரு சூப்பர் 4ஜி போன்.. itel Magic 2 4G வாங்க நீங்க ரெடியா?

|

ஐடெல் (itel) நிறுவனம் ஐடெல் மேஜிக் 2 4ஜி (itel Magic 2 4G) என்ற புதிய பியூச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ஐடெல் மேஜிக் 2 4ஜி பியுச்சர் போன் சாதனம் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த புதிய ஐடெல் மேஜிக் 2 4ஜி போனில் 4ஜி உட்பட பல புதிய அம்சங்களுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன? இந்த போனை நம்பி வாங்கலாமா என்று தெரிந்துகொள்ளலாம்.

ஐடெல் மேஜிக் 2 4 ஜி பியூச்சர் போன்

ஐடெல் மேஜிக் 2 4 ஜி பியூச்சர் போன்

மேஜிக் தொடரின் கீழ் LTE இணைப்பிற்கான ஆதரவுடன் வரும் முதல் மாடல் ஐடெல் மேஜிக் 2 4 ஜி பியூச்சர் போன் மட்டுமே என்று நிறுவனம் கூறியுள்ளது. மாடல் எண் it9210 ஐக் கொண்ட ஐடெல் மேஜிக் 2 4 ஜி சாதனம் வைஃபை இணைப்பு மற்றும் ஹாட்ஸ்பாட் டெதரிங் ஆகியவற்றிற்கான ஆதரவோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 8 சாதனங்களுடன் இணையத் தரவைப் பகிர இந்த சாதனத்தை நீங்கள் மோடமாக கூடப் பயன்படுத்தலாம்.

ஐடல் மேஜிக் 2 4 ஜி சிறப்பம்சம்

ஐடல் மேஜிக் 2 4 ஜி சிறப்பம்சம்

விவரக்குறிப்புகளைப் பற்றிப் பேசுகையில், ஐடல் மேஜிக் 2 4 ஜி சாதனம் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது அல்பானுமெரிக் கீஸ்கள் மற்றும் டிஸ்ப்ளேவின் கீழே ஒரு கபாசிட்டிவ் பட்டனைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், சாதனம் பின்புற பேனலின் மேல் இடது மூலையில் ஒரு வட்ட தொகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒற்றை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

யுனிசாக் டைகர் T117 சிப்செட்

யுனிசாக் டைகர் T117 சிப்செட்

இந்த பியூச்சர் போன் சாதனம் யுனிசாக் டைகர் T117 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் பியூச்சர் போனில் 4 ஜி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்செட் தொலைபேசியில் இரட்டை 4 ஜி VoLTE இணைப்பைக் கொண்டு வருகிறது. இந்த சாதனம் 64MB ரேம் கொண்ட 128MB ஸ்டோரேஜ் ஆன் போர்டில் உள்ளது. இது மைக்ரோ SD ஸ்லாட் வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய அம்சத்தைக் கொண்டுள்ளது.

கிங் வாய்ஸ் அம்சம்

கிங் வாய்ஸ் அம்சம்

மேலும், இந்த சாதனம் கிங் வாய்ஸ் அம்சம் என அழைக்கப்படும் ஐடெல் மொபைலின் பிரத்யேக டெக்ஸ்ட் டு ஸ்பீச் அம்சத்துடன் வருகிறது. இது உள்வரும் அழைப்புகள், மெசேஜ்கள், போன் மெனு மற்றும் போன் புக் போன்றவற்றை கேட்க பயனரை அனுமதிக்கிறது. இந்த சாதனத்தின் போன் புக் பயனர்களை 2000 காண்டாக்ட் வரை சேர்க்க அனுமதிக்கிறது.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

மலிவு விலையில் நம்பி வாங்கக்கூடிய பியூச்சர் போன்

மலிவு விலையில் நம்பி வாங்கக்கூடிய பியூச்சர் போன்

ஐடெல் மேஜிக் 2 4 ஜி பியூச்சர் போன், 1.3MP பின்புற கேமரா, பிரத்தியேக எல்.ஈ.டி டார்ச்லைட், ஒன்-டச் மியூட், ரெக்கார்டிங் அனுகூலத்துடன் வயர்லெஸ் எஃப்.எம் மற்றும் உரையாடல்களை பதிவு செய்ய ஆட்டோகால் ரெக்கார்டர் போன்ற பிற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த சாதனத்தில் எட்டு எளிய கேம்கள் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 1900 எம்ஏஎச் பேட்டரி உடன் 24 நாட்கள் நீடித்து நிலைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் ரூ. 2349 மட்டுமே.

Most Read Articles
Best Mobiles in India

English summary
itel Magic 2 4G feature phone With 4G LTE Wi-Fi & hotspot Tethering at Price Rs 2349 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X