Home
Mobile

ரூ. 6,599 விலையில் புதிய iTel விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. இலவச BT ஹெட்செட் கூட இருக்கு..

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்பொழுது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விட மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கே மவுசு அதிகமாகியுள்ளது. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் இப்போது இந்தியர்களுக்கு அதிக பிரியம். அப்படி, சமீபத்தில் பிரபலம் அடைந்து வரும் தயாரிப்பு நிறுவனம் தான் iTel. iTel நிறுவனத்தின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் பற்றிய பதிவு தான் இது.

விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்

விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்

சமீபத்தில் விஷன் 1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்திய பின்னர், ஐடெல் நிறுவனம் இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. ஐடெல் அறிமுகம் செய்யப்போகும் புதிய போனிற்கு விஷன் 1 புரோ என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெறும் ரூ. 6,599 என்ற விலையில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tel Vision 1 Pro போனின் சிறப்பம்ச விபரம்

Tel Vision 1 Pro போனின் சிறப்பம்ச விபரம்

iTel Vision 1 Pro போனின் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம், 6.52' இன்ச் HD பிளஸ் வாட்டர் ட்ராப் நாட்ச் கொண்ட IPS டிஸ்பிளே, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இது 4,000 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளது. விஷன் 1 ப்ரோ பேட்டரி, 24 மணிநேர பயன்பாடு, ஏழு மணிநேர வீடியோ, ஆறு மணிநேர கேமிங், 800 மணிநேர ஸ்டான்பை மற்றும் 35 மணிநேரம் இசை அனுபவத்தை வழங்குகிறது.

AI டிரிபிள் கேமரா அமைப்பு

AI டிரிபிள் கேமரா அமைப்பு

இதுதவிர, ஸ்மார்ட்போனில் AI டிரிபிள் கேமரா அமைப்புடன் கூடிய பின்புற பிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 5 எம்.பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்மார்ட்போன் AI பியூட்டி மோடு, போட்ரைட் மோடு, ப்ரோ மோடு, லோ-லைட் மோடு மற்றும் எச்டிஆர் மோடு போன்ற பல மோடுகளை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இலவசமாக மோனோ ப்ளூடூத் ஹெட்செட்

இலவசமாக மோனோ ப்ளூடூத் ஹெட்செட்

இதில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற இரட்டை பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் ஒரு பாதுகாப்பு கேசும் வழங்கப்பட்டுள்ளது. யூசர் மேனுவல், யூ.எஸ்.பி கேபிள், மற்றும் உத்தரவாத அட்டை ஆகியவை பாக்சுடன் வருகிறது. மேலும், இப்போது ஸ்மார்ட்போன் ஒரு ஆரம்பகால சலுகையுடன் வருகிறது, இப்போது வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் இலவசமாக மோனோ ப்ளூடூத் ஹெட்செட் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Itel Launches Vision 1 Pro Smartphone: Price, Specification, And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X