ரூ.5,999/-க்கு 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் பவர்ப்ரோ பி41.!

Written By:

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் அதன் பவர் ப்ரோ பி41 ஸ்மார்ட்போனை ரூ.5,999/-க்கு அறிமுகம் செய்துள்ளது. கிராஃபைட், சில்வர் ஆஷ் மற்றும் ஷாம்பெய்ன் ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாடு முழுவதும் பெரிய சில்லறை விற்பனையாளர்கள் கிடைக்கும்.

ரூ.5,999/-க்கு 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் பவர்ப்ரோ பி41.!

ஐடெல் பவர்ப்ரோ பி41 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமானது அதன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட் (எல்சிஇ வாய்ஸ்) மற்றும் வைலீ (வீடியோ மீது எல்டிஇ) ஆகியவைகளை குறிப்பிடலாம். இக்கருவியின் ஸ்டான்ட்-பை 35 நாட்களுக்கு நீடிக்கும், 51 மணிநேர பேச்சு நேரம் மற்றும் 95 மணிநேர இசை பின்னணி ஆகியவைகளை வழங்குகிறது.

பவர்ப்ரோ பி41 ஸ்மார்ட்போன் ஆனது 854x480 பிக்சல்கள் திரை தீர்மானம் அளவிலான கொண்ட 5-அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் க்வாட்கோர் செயலி மூலம் 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான 2ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. 8ஜிபி உள்சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க ஆதரவும், மல்டி-அக்கவுண்ட் அம்சங்களை கொண்டுள்ளது.

அதாவது இது பயனர்களை ஒரே நேரத்தில், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளில் இரண்டு கணக்குகளை செயல்படுத்துவதற்கு அனுமதிக்கிறது. இந்த சாதனத்தில் ஸேண்டர் (Xender) பயன்பாடு முன்பே நிறுவப்பட்டிருக்கிறது.

கேமரா துறையை பொறுத்தமட்டில், ஆட்டோபோகஸ் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது.



English summary
Itel launches PowerPro P41 smartphone with 5000mAh battery in India for Rs 5,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot