Home
Mobile

அடிச்சான் பாரு ஐடெல்.. சிங்கிள் சார்ஜில் 12 நாள் பேட்டரி.. கம்மி விலை.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன் மற்றும் பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக நோக்கியா நிறுவனம் போன்று இந்த ஐடெல் நிறுவனமும் கம்மி விலையில் அசத்தலான பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஐடெல் நிறுவனம் சத்தமில்லாமல் ஐடெல் it5330 (itel it5330) எனும் பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பீச்சர் போன் ஆனது பெரிய டிஸ்பிளே மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடிச்சான் பாரு ஐடெல்.. சிங்கிள் சார்ஜில் 12 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

ஐடெல் it5330 அம்சங்கள்: 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஐடெல் it5330 பீச்சர் போன். குறிப்பாக கண்ணாடி பூச்சு பிளாட் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த ஐடெல் பீச்சர் போன். எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஒன்பது ஆதரவை வழங்குகிறது இந்த ஐடெல் it5330 மாடல். மேலும் இந்த போனில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அடிச்சான் பாரு ஐடெல்.. சிங்கிள் சார்ஜில் 12 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

ஆட்டோ கால் ரெக்கார்டிங் (Auto call recording) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் it5330 மாடல். மேலும் இந்த போனில் கிங் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. அதேபோல் 1000 கான்டாக்ட்களை இதன் போன்புக்கில் சேமிக்க முடியும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VGA கேமரா, வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், டார்ச் - பேக் ஃப்ளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 1900 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஐடெல் it5330 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் 12 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

ப்ளூ, லைட் கிரீன், லைட் ப்ளூ, பிளாக் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஐடெல் it5330 பீச்சர் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஐடெல் போனின் விலை ரூ.1499-ஆக உள்ளது. குறிப்பாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஐடெல் it5330 போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த பீச்சர் போனில் உள்ளதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஐடெல் ஏ05எஸ் (itel A05s) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஐடெல் நிறுவனம். இந்த போன் 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும்1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அடிச்சான் பாரு ஐடெல்.. சிங்கிள் சார்ஜில் 12 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

1.6ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் எஸ்சி9863ஏ ஆக்டோ-கோர் (Unisoc SC9863A octa-core processor) பிராசஸர் வசதியுடன் இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு 5எம்பி செல்பி கேமரா, 5எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஐடெல் ஏ05எஸ் போன் வெளிவந்துள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன். டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel it5330 with battery backup of up to 12 days launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X