யாரு சாமி நீ? வெறும் ரூ. 2499 விலைக்கு ஃபிலிப் போன் தர.. உலகே வியந்து பார்க்குது.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்
உலக வரலாற்றில் இதுவரை யாரும் கனவில் கூட எதிர்பார்த்திடாத மிகமிக குறைந்த அடிமட்ட விலைக்கு ஒரு புதிய பிலிப் டைப் மொபைல் (Flip Mobile) சாதனத்தை ஐடெல் (itel) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பிலிப் மொபைல் சாதனம் இப்போது இந்தியாவில் மூன்று கவர்ச்சிகரமான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. itel நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாதனம் ஐடெல் ஃபிலிப் ஒன் (itel Flip One) என்ற பெயருடன் வெறும் ரூ. 2499 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை பற்றிய முழு விபரங்கள் இதோ.
ஐடெல் (itel) நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் புதிதாக ஐடெல் ஃபிலிப் ஒன் (itel Flip One) என்ற மடக்ககூடிய மொபைல் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. itel நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் பிலிப் கீபேட் மொபைல் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இப்போது பிலிப் டைப் ஸ்மார்ட்போன்களின் ட்ரெண்ட் வேகமாக பரவி வருகிறது. ஆனால், பிலிப் டைப் ஸ்மார்ட்போன்கள் விலையில் அதிகமானதாக இருக்கிறது.

யாரு சாமி நீ? வெறும் ரூ. 2499 விலைக்கு ஃபிலிப் போன் தர.. புது ஐடெல் ஃபிலிப் ஒன் (itel Flip One):
இதுவரை பிரீமியம் செக்மென்ட்டில் அதிக பணம் கொடுத்து மட்டுமே வாங்க கிடைத்த பிலிப் டைப் போன்களின் அனுபவத்தை itel நிறுவனம் இப்போது அடிமட்ட ரேட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அடிமட்ட விலைக்கு இந்த புதிய itel Flip One சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இதுவொரு பியூச்சர் போன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.2499 விலையில் பியூச்சர் போன் தான் கிடைக்கிறது என்றாலும், இதன் அம்சங்கள் நம்மை கவர்ந்திழுக்கிறது.
இந்த புதிய itel Flip One சாதனம் படு மெலிதாக ஸ்லீக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிலிப் செய்து ஓபன் செய்து மூடும் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் தோற்றத்தை பிரீமியம் போன்களுக்கு நெருக்கமாக காண்பிக்க itel இதன் பின்பக்கத்தில் லெதர் தோற்றம் மற்றும் கிளாஸ் கீபேட்களை வழங்கியுள்ளது. இது மிகவும் லைட் வெயிட் கொண்ட மொபைலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கையில் பிடித்து பயன்படுத்த ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக itel கூறியுள்ளது. இந்த புதிய itel Flip One சாதனம் Type-C சார்ஜிங் பொயட் உடன் 1200mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஐடெல் ஃபிலிப் ஒன் பியூச்சர் போன் (itel Flip One Feature Phone) சாதனம் 7 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இந்த போனில் இருக்கும் மற்ற முக்கியமான அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
ஐடெல் ஃபிலிப் ஒன் சிறப்பம்சம் (itel Flip One Specifications):
ஐடெல் ஃபிலிப் ஒன் (itel Flip One) சாதனம் 2.4" இன்ச் அளவு கொண்ட OVGA டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இந்த சாதனம் கிளாஸ் கீபோர்ட் உடன் பட்டன் டைப்பிங் ஆதரவை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் கால்லிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த பியூச்சர் போன் 13 வகையான இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ற உங்கள் சொந்த தாய்மொழியில் இந்த போனை பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு கிடைக்கும். இந்த itel Flip One போனில் கிங் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த பியூச்சர் போன் சாதனம் FM ரேடியோ, டூயல் சிம் கார்டு சப்போர்ட், VGA கேமரா போன்ற மற்ற அடிப்படை அம்சங்களையும் வழங்குகிறது. இந்த itel Flip One மொபைல் சாதனம் 1 வருடி வாரன்டியுடன் இப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
ஐடெல் ஃபிலிப் ஒன் விலை (itel Flip One Price):
இதன் விலை பற்றி பேசுகையில், புதிய itel Flip One மொபைல் சாதனம் இப்போது வெறும் ரூ. 2499 என்ற விலையில் லைட் ப்ளூ, ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இது தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் இந்தியாவில் உள்ள அணைத்து ரீடைலர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. மிகமிக மலிவு விலையில் பிலிப் போன் அனுபவத்தை அனுபவிக்க விரும்புவோருக்கு இது நல்ல சாய்ஸ்.


Click it and Unblock the Notifications








