என் ரூட்டே வேற.. Foldable Phone-களுக்கு மத்தியில்.. ஸ்டைலா, கெத்தா அறிமுகமாகும் Itel Flip One ஃபீச்சர் போன்!
Itel Flip One India Launch: பெரும்பாலான பிராண்டுகள் (கூகுள், ஒன்பிளஸ் உட்பட) தத்தம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை (Foldable Smartphones) அறிமுகம் செய்ய மும்மரமாக உள்ள நிலையில், சில நிறுவனங்கள் (டெக்னோ, ஒப்போ ஆகியவைகள்) ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட்களை (Tri-Fold Smartphone Concept) காட்சிப்படுத்தியே விட்டன. இதற்கிடையில் ஐடெல் (Itel) நிறுவனமானது தனது புதிய ஃபிளிப்-ஸ்டைல் பீச்சர் போனின் இந்திய அறிமுகத்தை உறுதிசெய்துள்ளது. அதென்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
எப்போது அறிமுகமாகும்? ஐடெல் ஃபிளிப் ஒன் பீச்சர் போன் (Itel Flip One Feature Phone) ஆனது இம்மாதம் (செப்டம்பர் 2024), இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஐடெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, இந்த போனை பற்றிய சில முக்கிய விவரங்களை ஐடெல் வெளிப்படுத்தி உள்ளது.

டிரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் (Transsion Holdings) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐடெல் நிறுவனத்திடம் இருந்த வரும் இந்த முதல் ஃபிளிப் ஸ்டைல் கீபேட் போன் (Flip-style keypad phone) ஆனது லெதர் பேக் (Leather Back) மற்றும் போர்ட்டபிள் டிசைனுடன் (Portable Design) வரும் என்பதும், இது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதும் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஐடெல் ஃபிளிப் ஒன் பீச்சர் போன் ஆனது நீக்க முடியாத பேட்டரி (non-removable battery) மற்றும் கிளாஸால் வடிவமைக்கப்பட்ட கீபேட் (glass-designed keypad) ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பதும், இது மொத்தம் 13 இந்திய மொழிகளை ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த போனின் சரியான இந்திய வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஐடெல் நிறுவனத்தின் பீச்சர் போன் ஆனது மற்ற பாரம்பரியமான நான்-ஸ்மார்ட் ஃபிளிப் போன்களை போலவே, இணையம், குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்பு மற்றும் கேமரா போன்ற அத்தியாவசியமான அம்சங்களை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இது இலகுரக மற்றும் கையடக்க வடிவமைப்புடன் வரும்; ஆக இதை ஒரு கையால் எளிமையாக இயக்கலாம்.
லெதர்-பேக் டிசைன் உடன் வரும் இந்த பீச்சர் போன் யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் ப்ளூடூத் இணைப்பு மற்றும் சார்ஜிங்கை வழங்கும். இந்த போனில் ப்ளூடூத் காலர் அம்சம் (Bluetooth caller feature) இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தொடர்புகளை ஒத்திசைத்து, பீச்சர் போன் வழியாக நேரடியாக அழைப்புகளை கையாள முடியும்.
முன்னரே குறிப்பிட்டப்படி, இது ஐடெல் பிராண்டின் முதல் ஃபிளிப் கீபேட் போன் ஆகும். ஐடெல் நிறுவனமானது மேலும் பல பீச்சர் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அதன் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. இது சமீபத்தில் இந்தியாவில் ஐபோன் போன்ற டைனமிக் பார் அம்சத்துடன் ஐடெல் ஏ50 மற்றும் ஐடெல் ஏ50சி மாடல்களை அறிமுகம் செய்திருந்தது.
இவ்விரு மாடல்களுமே யுனிசாக் டி603 சிப்செட் கொண்டு இயங்குகின்றன. மேலும் 8 மெகாபிக்சல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை ஐடெல் ஏ50 (Itel A50) மாடல் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது, மறுகையில் ஐடெல் ஏ50சி (Itel A50C) மாடல் ஆனது 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இரண்டுமே ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட்கள் வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் ஐடெல் நிறுவனம் பிளிப் ஸ்டைல் பீச்சர் போனை அறிமுகம் செய்வது மேலோட்டமாக பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட, மடங்கக்கூடிய அல்லது நடக்கக்கூடிய போன்களின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அடிப்படையாக கொண்டே வெளியாகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications