Home
Mobile

அடிச்சான் பாரு itel.. ரூ.9999 போதும்.. 50MP கேமரா, நிறம் மாறும் பேனல்.. அறிமுகமானது 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐடெல் (Itel) நிறுவனம் இந்திய சந்தையில் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (itel Color Pro 5G) போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இது கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) ஆகும். அதாவது இந்த போனின் பின்புற பேனல் ஆனது நிறத்தை மாற்ற IVCO (ஐடெல் விவிட் கலர்) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஐடெல் கலர் ப்ரோ 5ஜி அம்சங்கள் (itel Color Pro 5G Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடிச்சான் பாரு ஐடெல்..அறிமுகமானது 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6080 5G chipset) வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)கொண்டுள்ளது இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.

6ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியும் இந்த போனில் உள்ளது.

அடிச்சான் பாரு ஐடெல்..அறிமுகமானது 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் லாவெண்டர் பேண்டஸி (Lavender Fantasy) மற்றும் ரிவர் ப்ளூ (River Blue ) நிறங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி போனை வாங்க முடியும்.

இந்த போனின் அறிமுக சலுகையாக ஒன்-டைம் ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் (one-time screen replacement) மற்றும் ரூ.3000 மதிப்புள்ள டிராலி பேக் வழங்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Color Pro 5G launched in India: check specifications, price, colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X