ரூ.12,000 விலையில் பிளாக்ஷிப் போனா? அசத்திய itel.. கலர் மாறும் இந்தியாவின் முதல் மலிவு விலை Mobile..
ஐடெல் (Itel) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதா கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஐடெல் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமே இந்த சாதனத்தை நிறுவனம் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யவுள்ளது. ரூ.12,000 விலையில் இந்த கலர் சேஞ்சிங் ஸ்மார்ட்போனை மக்கள் வாங்கலாம் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இதன் அம்சம் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் நிறுவனம் மலிவு விலையில் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற புத்தம் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது நிறுவனம் IVCO என்றழைக்கப்படும் டெக்னாலஜியை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. IVCO என்பது ஐடெல் கலர் விவிட் கலர் தொழில்நுட்பம் என்பதை குறிக்கிறது. இந்த புதிய கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி போனில் இடம்பெறுகிறது.

ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G):
இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் நிறுவனம் இந்த IVCO தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம், சூரிய வெளிச்சத்தில் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் படும் போது, அதன் நிறம் உடனே மாறிவிடும் தன்மையை இந்த ஸ்மார்ட்போன் சாதனம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற கலர் மாறும் தொழில்நுட்பம் இதற்கு முன்பு விவோ (Vivo) மற்றும் ஒப்போ (Oppo) போன்ற பிராண்டட் போன்களில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடெல் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) ப்ளூ நிறத்தில் அதன் போஸ்டரில் காணப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் கேமரா உடன் LED பிளாஷ் அம்சத்தை பேக் பேனலில் காண்பித்துள்ளது.
ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) போனின் வால்யூம் ராக்கர் பட்டன் மற்றும் பவர் பட்டன் வலது புறத்தில் வருகிறது. இந்த புதிய Itel Color Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 12,000 விலை முதல் ரூ. 15,00 விலைக்குள் வாங்க கிடைக்கும் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்குமென்று ஐடெல் தெரிவித்துள்ளது.
கலர் மாறும் இந்தியாவின் முதல் மலிவு விலை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்:
இதற்கு முன்பு நிறுவனம் ரூ.10,000 விலையில் முதல் 5ஜி போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. itel பிராண்ட் இந்தியாவின் பட்ஜெட் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக ரூ. 10,000 விலை பிரிவில் சிறந்த போன்களை இந்திய மக்களுக்கு வழங்கி வருகிறது. Itel Color Pro 5G போனின் சிறப்பம்ச விபரங்கள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications








