யாரு சாமி அவன்.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் பழைய 5ஜி ஸ்மார்ட்போன்களில் விலையே உயர்ந்து வருகிறது. ஆனால், ஐடெல் நிறுவனம், தொடர்ந்து பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இப்போது, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் பிரீமியம் லுக் கொடுக்கும்படி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஐடெல் ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் சிட்டி 300 5ஜி (itel City 300 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. வழக்கம்போல ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகி இருந்தாலும், இந்த முறை அரிசோன்டல் கேமரா டிசைனி் பிரீமியம் காட்டி இருக்கிறது. அதேபோல பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது. அல்ட்ராலிங்க் ப்ரீ காலிங் உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களும் வருகின்றன.

ஐடெல் சிட்டி 300 5ஜி அம்சங்கள் (itel City 300 5G Specifications): 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஐடெல் சிட்டி 300 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோஸ ஆக்டா கோர் யூனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட்டுடன் இந்த ஐடெல் சிட்டி 300 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டும் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், 4 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்காக மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது. இதில் நானோ சிம் சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி ரியர் கேமரா கொண்ட மாடலாக இந்த ஐடெல் சிட்டி 300 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது 30FPS ரெக்கார்டிங் வருகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை இந்த ஐடெல் சிட்டி 300 5ஜி கொடுத்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பல ஸ்மார்ட்போன்கள் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட மாடல்களாகவே வெளியாகி வருகின்றன. இதில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஐடெல் சிட்டி 300 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் வருகிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) கொடுக்கப்பட்டு உள்ளது.
4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கனெக்டிவிட்டிகள் வருகின்றன. மேலும், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. ரூ.14,999 ஆக விலை இருக்கிறது. ஐடெல் தளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
