வீட்டுக்கு 2 ஆர்டர் விழுமே.. ரூ.8000 க்கு 12GB ரேம், 5200mAh பேட்டரி, AI அம்சங்கள், IP64.. FREE ஸ்பீக்கர் வேற!
இந்தியாவில், பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன ஐடெல் நிறுவனம், ரூ.8000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக இது மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் சில பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது. அப்படி என்ன அம்சங்கள்? என்ன விலை? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் சிட்டி 100 (Itel City 100) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்டைல் (Style)மற்றும் நீடித்து உழைக்கும் (Durability) தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐடெல் சிட்டி 100 ஆனது ஒரு நேர்த்தியான மற்றும் இலகுரக யூனிபாடி (Lightweight unibody) டிசைனில் ஒரு பெரிய டிஸ்பிளே, நீடித்த பேட்டரி லைஃப் மற்றும் ஸ்மார்ட் ஏஐ செயல்பாடு (Smart AI functionality) ஆகிய முக்கிய அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த போனின் இன்னொரு முக்கிய சிறப்பம் - இது இலவச மேக்னெட்டிக் ஸ்பீக்கர் (Free magnetic speaker) உடன் வருகிறது.
ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிசைனை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது தூசி மற்றும் அவ்வப்போது ஏற்படும் ஸ்பிளாஷ்களை (நீர் தெளிப்புகளை) எதிர்க்கும். அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பாடியின் நான்கு மூலைகளும் - தினசரி தேய்மானம் மற்றும் கிழிவை தாங்கும் வகையில் வலுவூட்டப்பட்டுள்ளன. இவ்வளவும் 7.65 மிமீ தடிமன் கொண்ட ஃபிரேமில் வருகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 83.5 சதவீதம் NTSC வைட் கலர் கேமட் உடனான 6.75-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (HD+ IPS LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவராவ் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் ஆனது யூனிசாக் டி7250 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி பிஸிக்கல் ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் ஆனது 13 மெகாபிக்சல் ரியர் கேமரா (13MP Rear Camera) மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (8MP Selfie Camera) கொண்டு உள்ளது. இரண்டுமே ஏஐ ஸீன் ஆப்டிமைசேஷனால் (AI scene optimization) மேம்படுத்தப்பட்டு உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இது 5200mAh பேட்டரியை கொண்டு உள்ளது, இது 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி -20°C முதல் 70°C வரையிலான தீவிர வெப்பநிலையிலும் கூட இந்த ஸ்மார்ட்போன் ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டை உறுதி செய்கிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல்-பேண்ட் வைஃபை, ஐஆர் பிளாஸ்டர், ஃபேஸ் அன்லாக், எஃப்எம் ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அம்சங்களையும் கொண்டுள்ளது.
கடைசியாக ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போனில் ஐடெல் நிறுவனத்தின் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஐவானா 3.0 உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஐவானா ஏஐ ஆனது போட்டோவில் இருந்து டெக்ஸ்ட்-ஐ பிரித்தெடுத்தல், டாக்குமெண்ட் மாற்றங்கள், ஏஐ ரைட்டிங் டூல்கள் மற்றும் மெசேஜ்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு உடனடி நேவிகேஷன் ஆகியவற்றை செயல்படுத்தும் திறனை கொண்டுள்ளது
ஐடெல் சிட்டி 100 விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.7,599 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபேரி பர்பிள், நேவி ப்ளூ மற்றும் ப்யூர் டைட்டானியம் ஆகிய கலர்களில் ஏற்கனவே (இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில்) வாங்குவதற்குக் கிடைக்கிறது.
முன்னரே குறிப்பிட்டபடி ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் உடன் ரூ.2,999 மதிப்புள்ள மேக்னெட்டிக் ஸ்பீக்கர் ஆனது முற்றிலும் இலவசமாக கிடைக்கும். கூடவே 100 நாட்களுக்குள் இலவச ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட்டையும் ஐடெல் நிறுவனம் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போனையும் கூடவே கவர்ச்சிகரமான சலுகைகளையும் ஐடெல் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








