Home
Mobile

போடு ஆர்டரை.. ஆஃபர் விலை ரூ.999 மட்டுமே.. 2 SIM யூஸ் பண்ணலாம்.. உலகின் முதல் வட்ட டிஸ்பிளே மினி போன்..

இதுவரை யார் கையிலும் நீங்கள் பார்த்திருக்கவே முடியாத ஒரு புதுவிதமான மொபைல் (mobile) சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். மொபைல் சாதனம் என்றாலே நீளமான சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவங்களில் தான் நாம் அதிகப்படியான சாதனங்களை பார்க்க முடிகிறது. ஏன் மொபைல் என்றாலே செவ்வக வடிவத்தில் தான் இருக்க வேண்டுமா? வேறெந்த வடிவங்களிலும் அதனை உருவாக்க முடியாதா? மாற்று யோசித்து நாங்கள் ஒரு புதுமையான மொபைலை உருவாக்குகிறோம் என்று ஐடெல் (itel) நிறுவனம் வட்ட டிஸ்பிளே கொண்ட (round display mobile) புதுமையான போனை அறிமுகம் செய்துள்ளது.

ஆம், முதல் முறையாக ரவுண்ட் டிஸ்பிளேவுடன் ஒரு அடிப்படை மொபைல் சாதனத்தை ஐடெல் நிறுவனம் (itel's first round display mobile phone) உருவாக்கியுள்ளது. இந்த போனை நிறுவனம் ஐடெல் சர்க்கிள் 1 (itel Circle 1) என்ற பெயருடன் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உருவக்கியுள்ளது. இதன் வடிவத்தில் ஐடெல் நிறுவனம் பல்வேறு வேறுபாடுகளை வழங்கி நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

போடு ஆர்டரை.. ஆஃபர் விலை ரூ.999 மட்டுமே.. 2 SIM யூஸ் பண்ணலாம்..

உலகின் முதல் வட்ட டிஸ்பிளே மினி போன்.. ஆஃபர் விலை ரூ.999 மட்டுமே:

ஐடெல் சர்க்கிள் 1 மொபைல் (itel Circle 1 mobile) சாதனம் வட்ட டிஸ்பிளேவுடன் வருவது ஒரு ஈர்ப்பாக இருந்தால், இது கையடக்க மினி மொபைல் (mini mobile) சாதனமாக வெளிவந்துள்ளது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த கையடக்க மொபைல் சாதனத்தை நீங்கள் கீசெயின் போலவும் பயன்படுத்தலாம், அல்லது பெரிய செயின் இல் கோர்த்து கழுத்தில் ஒரு டாலர் செயின் போலவும் அணிந்துகொள்ளம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மொபைல் சாதனத்தை செயின் உடன் கோர்ப்பதற்கு போனின் அடிபகுதியில் தனியாக ஒரு பிரத்தியேக கொக்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஐடெல் சர்க்கிள் 1 (itel Circle 1) சாதனம் இப்போது அமேசான் (Amazon) தளத்தில் இதுவரை கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த போனின் அசல் விலை ரூ. 1899 ஆகும். ஆனால், தற்போது நடைபெறும் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.999 விலைக்கு வாங்க கிடைக்கறியாது.

ஐடெல் சர்க்கிள் 1 மொபைல் சிறப்பம்சம் (itel Circle 1 mobile Specifications):

இந்த வித்தியாசமான ஐடெல் சர்க்கிள் 1 (itel Circle 1) போனின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இந்த போன் 1.32" இன்ச் அளவு கொண்ட வட்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மிகவும் துல்லியமான மற்றும் கிரிஸ்டல் கிளியர் விசுவலை வழங்குகிறது. இந்த போன் முழுக்க முழுக்க கீபேட் உதவியுடன் (mini keypad phone) இயங்கும் சாதனமாக வெளிவந்துள்ளது.

இந்த குட்டி சைஸ் மொபைல் (mini mobile) சாதனம் 4MB ரேம் (RAM) ஆதரவுடன் 32GB ஸ்டோரேஜ்ஜை இந்த டிவைஸ் கொண்டுள்ளது. இந்த ஐடெல் சர்க்கிள் 1 மொபைல் சாதனம் நியூக்ளியஸ் ஓஎஸ் (Nucleus OS) இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 500mAh பேட்டரி ஆதரவுடன் இரண்டு நாள் வரை நீடிக்கும் பேட்டரி (battery life) ஆயுளை கொண்டுள்ளது.

FM, கேமரா, டூயல் SIM கார்டு ஆதரவு:

FM அல்லது கேமரா அல்லது மியூசிக் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி ஆயுளை இந்த டிவைஸ் கொண்டுள்ளதாக itel கூறியுள்ளது. இது ப்ளூடூத் காலிங் (bluetooth calling), வைஃபை (Wi-Fi) மற்றும் USB அம்சத்தை கொண்டுள்ளது. இதனால், மற்ற சாதனங்களுடன் இதை இணைத்தும் நீங்கள் எளிமையாக பயன்படுத்த முடியும். இது டூயல் சிம் ஆதரவை ஆதரிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இதில் அடிப்படை கேமரா வசதியும் உள்ளது.

குறைந்த விலையில் ஒரு அடிப்படை மொபைல் சாதனத்தை வாங்க நினைத்தால், இந்த ஐடெல் சர்க்கிள் 1 மொபைல் சாதனம் மிகவும் சிறந்த தேர்வாக அமையும். இது பிளாக் (black) மற்றும் ரோஸ் கோல்டு (rose gold) நிறங்களில் வருகிறது. இதை நீங்கள் ஒரு கீசெயின் போல பயன்படுத்தலாம் என்பதனால், இதை எப்போதும் உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்.

Best Mobiles in India

English summary
itel Circle 1 with Unique Round Screen Display Mini Mobile Phone 2 SIM Card Gets Amazon Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X