Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.1,799 க்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்.. 1200mAh பேட்டரி.. VGA கேமரா.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனத்தின் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட பீச்சர் போனாக ஐடெல் அக்வா (itel Aqua) மாடல் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. IP67 ரேட்டிங் மட்டுமல்லாமல், விஜிஏ கேமரா, 1200mAh பேட்டரி, ஆட்டோ கால் ரெக்கார்டிங் போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஐடெல் அக்வா பீச்சர் போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

ஐடெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே அடிமட்ட பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் லெவலுக்கு பீச்சர்களை கொடுக்கும். இப்போது, பீச்சர் போன்களிலும் அதை செய்துள்ளது. ஐடெல் அக்வா பீச்சர் போனில் IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. 30 நிமிடங்களுக்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் இருக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.1,799 க்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்.. 1200mAh!

மேலும், டிராப் ரெசிஸ்டன்ஸ், ரெயின் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதுபோக ஏஐ என்விரான்மென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) கொடுத்துள்ளது. ஆகவே, அதிக நாய்ஸ் கேட்கும் பகுதிகளிலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்தை இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் கொடுக்கும்.

இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், மலையாளம் மொழிகள் சப்போர்ட் கொடுக்கிறது. ஆட்டோ கால் ரெக்கார்டிங் (Auto Call Recording) கிடைக்கிறது. ஆகவே, தனியாக ரெக்கார்டிங் ஆப் தேவைப்படாது. வயர்லெஸ் எப்எப் (Wireless FM) கொடுக்கப்பட்டு உள்ளது. டைப் - சி சார்ஜிங் (Type - Charging) கொண்ட மாடலாக இருக்கிறது.

ஐடெல் அக்வா பீச்சர் போன் அம்சங்கள் (itel Aqua Feature Phone Specifications): 2.4 இன்ச் பிரைட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. 1200mAh பேட்டரியை இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் கொண்டுள்ளது. ஆகவே, 10.6 மணி நேரங்களுக்கு வாய்ஸ் பேக்கப் கொடுக்கிறது. ஸ்டான்ட்பை மோடில் 25 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.1,799 க்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்.. 1200mAh!

சூப்பர் பேட்டரி மோட் (Super Battery Mode), ஏஐ பேட்டரி (AI Battery) போன்ற பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. விஜிஏ கேமரா (VGA Camera) கொண்ட மாடலாக இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் கிடைக்கிறது. 1000 கான்டெக்ட்களை சேமித்து கொள்ளலாம். 60 கால் லாக்குகள் மற்றும் 250 மெசேஜ்களை ஸ்டோர்ஜ் செய்து கொள்ளலாம்.

இதற்கு மேல் ஆட்டோ டெலிட் செய்யப்பட்டுவிடும். ஆட்டோ கால் ரெக்கார்டிங் ஆப்ஷன் இருக்கிறது. இதை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம். 2 நானோ சிம் (Nano SIM) சப்போர்ட் கொடுத்து உள்ளது. ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் இருக்கிறது. இப்போது, விலை விவரங்களை பார்க்கலாம்.

இந்த ஐடெல் அக்வா பீச்சர் போனின் விலை ரூ.1,799 ஆக இருக்கிறது. ஐடெல் தளத்திலும் ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் எதிர்பார்க்கலாம். டிசைனிலும் குவாலிட்டியாக இருக்கிறது. ப்ளூ (Blue), ரெட் (Red) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் இந்த ஐடெல் அக்வா பீச்சர் போன் கிடைக்கிறது. இந்த விலைக்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வரவேற்க வேண்டியதாகும்.

Best Mobiles in India

English summary
itel Aqua Feature Phone With IP67 Rating 1200mAh Battery VGA Camera Launched in India Under Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X