Home
Mobile

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. வெறும் ரூ.949 போதும்.. 1000mAh பேட்டரி.. 1.8 இன்ச் டிஸ்பிளே.. 32GB மெமரி.. எந்த போன்?

இந்திய மார்கெட்டில் பீச்சர் போன்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. இதில் ஐடெல் நிறுவனம், புதுப்புது மாடல்களை களமிறக்கி தனியிடம் பிடித்து வருகிறது. இப்போது, ஐடெல் ஏஸ் 4 ஹீரா (itel Ace 3 Heera) பீச்சர் போனை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த மார்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, மார்கெட்டுக்கு வரும் பீச்சர் போன்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அந்த போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பீச்சர் போனுக்கு தனியாக சார்ஜர் வாங்க வேண்டி இருக்காது. அதேபோல பேட்டரி பேக்கப் முக்கியமாக இருக்கிறது. இதிலும் எந்த குறையும் இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா போனில் கிடையாது. ஏஐ ஆப்டிமைசேஷனுடன் பேட்டரி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. வெறும் ரூ.949 போதும்.. 1000mAh பேட்டரி!

டிஸ்பிளேவிலும் அதிக பிரைட்னஸ் கிடைக்கும்படி என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆகவே, லோவ் லைட்டிலும் டிஸ்பிளே அவுட்புட் பக்காவாக இருக்கும். இதுபோக ஆட்டோ கால் ரெக்கார்டர் (Auto Call Recorder), வயர்லெஸ் எப்எம் (Wireless FM) போன்ற கூடுதல் பீச்சர்களையும் இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா பீச்சர் போன் கொடுத்துள்ளது. முழு பீச்சர்களை பார்க்கலாம்.

ஐடெல் ஏஸ் 4 ஹீரா அம்சங்கள் (itel Ace 3 Heera Specifications): டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 1000mAh பேட்டரியுடன் இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா பீச்சர் போன் கிடைக்கிறது. இந்த பேட்டரி வழியாக 177 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை பெற்று கொள்ளலாம். 9.64 மணி நேரங்களுக்கு டாக்டைம் கிடைக்கும். இதில் ஏஐ சூப்பர் பேட்டரி மோட் (Super Battery Mode) கிடைக்கிறது.

ஆகவே, பேக்கிரவுண்ட்டில் ஏற்படும் பேட்டரி பயன்பாட்டை தேவைக்கு ஏற்ப குறைத்து, பேக்கப்பை நீட்டிக்க செய்யும். ஆகவே, இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா பீச்சர் போனில் கூடுதல் பேக்கப் பெற்று கொள்ளலாம். சிங்கிள் சிம் கார்டு (Single SIM Card) மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல 32 ஜிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆகவே, சிம் சிலாட் (SIM Slot) + எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வயர்லெஸ் எப்எம் ரேடியோ (Wireless FM Radio) கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது. மற்ற பீச்சர்களை பார்க்கையில், கிங் வாய்ஸ் (King Voice) மற்றும் ஸ்பீடு டயல் (Speed Dial) உள்ளது.

500 கான்டாக்ட்கள் (Contacts) மற்றும் 250 எம்எம்எஸ்களை (SMS) சேமித்து வைத்து கொள்ள முடியும். 10 மொழிகளில் இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா பீச்சர் போனை பயன்படுத்தி கொள்ளலாம். கீ-போர்ட் போன்களில் வழக்கமாக கிடைக்கும் ஸ்பீக்கர் உள்ளது. எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா போனில் கேமரா கிடையாது.

ரூ.949 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக் (Black), டீப் ப்ளூ (Deep Blue) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் ஐடெல் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 1 வருடத்துக்கு ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி கொண்ட மாடலாக இந்த ஐடெல் ஏஸ் 4 ஹீரா கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
itel Ace 3 Heera With 1000mAh Battery Launched Under Rs 1000 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X