Home
Mobile

மலிவு விலையில் itel 5ஜி போன் அறிமுகம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. AI அம்சங்கள்.. எந்த மாடல்?

ஐடெல் (itel) நிறுவனம் இந்தியாவில் ஐடெல் ஏ95 5ஜி (itel A95 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐடெல் ஏ95 5ஜி அம்சங்கள் (itel A95 5G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch response rate), பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மலிவு விலையில் itel 5ஜி போன் அறிமுகம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐடெல் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மேம்பட்ட AI அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

இந்த போன் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (Dust and Splash Resistance IP54 Rating)பெற்றுள்ளது. அதேபோல் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர ஃபேஸ் அன்லாக வசதியும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

5000mAh பேடடரி உடன் ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த போன் பேட்டரி நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset)வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9599-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.9999-ஆக உள்ளது. தற்போது வரை இந்த போனின் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
itel A95 5G With 50MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X