கம்மி பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. கலர் மாறும் பேக் பேனல்.. இந்தியாவுக்கு வரும் புது Itel 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐடெல் (Itel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐடெல் ஏ95 5ஜி (Itel A95 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஐடெல் நிறுவனம். அதாவது இந்த போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கலர் மாறும் பேக் பேனல் (color-changing back panel), 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஐடெல் போன் வெளிவரும். மேலும் அறிமுகத்திற்கு முன்பே ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐடெல் ஏ95 5ஜி அம்சங்கள் (Itel A95 5G specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட் உடன் இந்த ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி AI டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஐடெல் போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் கலர் மாறும் பேக் பேனல் உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Side-mounted Fingerprint Sensor) இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த ஐடெல் ஏ95 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐடெல் போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐடெல் ஏ95 5ஜி போன் ஆனது ரூ.9,999 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: passionategeekz, themobileindian, itel


Click it and Unblock the Notifications








